நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பே சீரியல்கள்!: நடிகை ஏகவள்ளி

தற்போது "கேளடி கண்மணி', "அபூர்வ ராகங்கள்' என இரண்டு தொடர்களில், இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து டிவி ரசிகர்களின் இதயத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஏகவள்ளி. அவரைத் தொடர்பு கொண்டோம்:

News image
Updated On :27 ஏப்ரல் 2016, 6:24 am

ஸ்ரீ

தற்போது "கேளடி கண்மணி', "அபூர்வ ராகங்கள்' என இரண்டு தொடர்களில், இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து டிவி ரசிகர்களின் இதயத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஏகவள்ளி. அவரைத் தொடர்பு கொண்டோம்:

"கேளடி கண்மணி', "அபூர்வ ராகங்கள்' தொடர் குறித்து?

கேளடி கண்மணி தொடரைப் பொருத்தவரை பார்க்க மிக அப்பாவியானப் பெண்ணாக இருந்துக் கொண்டு அதிரடி வில்லியாக அதாவது சைலனட் கில்லராக வரும் நெகட்டிவ் கேரக்டர். நல்ல சஸ்பென்ஸôக போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு அப்படியே நேர் ஏதிராக பாஸிடிவ் ரோல் அபூர்வ ராகங்கள் தொடரில். ஆனால், விரைவில் அபூர்வ ராகங்கள் தொடரில் என் கேரக்டரில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு விறுவிறுப்பாக மாறி ரசிகர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இரண்டு கேரக்டர்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

எந்த மாதிரியான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

பொதுவாக சீரியல்களில் வரும் சம்பவங்கள், பிரச்னைகள் அனைத்துமே நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புதான். அதனால் சீரியலில் எந்த கேரக்டரில் நடித்தாலும், அதை என் நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்று பாவித்துக் கொண்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவேன். அதனால் எந்த மாதிரியான வேடம் கிடைத்தாலும் அதிலுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து நடிப்பேன்.

டைட்டில் கேரக்டர்களில் நடிக்க முயற்சி ஏதும் செய்திருக்கிறீர்களா?

இதுவரை அதுபோன்ற முயற்சி ஏதும் செய்யவில்லை. ஏனென்றால் இதுவரை நல்ல கேரக்டர்களாக வந்ததால் அதைப்பற்றி யோசிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

உங்களது ரோல் மாடல் யார்?

எனக்கு யாரும் ரோல் மாடல் இல்லை. நான்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலா இருக்க ஆசைப்படுகிறேன். என்னை மாதிரி நடிக்க மற்றவங்க ட்ரை பண்ணட்டும்னு நெனைக்கிறேன்.

பாசிட்டிவ்-நெகட்டிவ் இரண்டில் எந்த மாதிரியான ரோல் பிடிக்கும்?

எனக்கு ஜாலியான ரோல்தான் பிடிக்கும். முக்கியமாக காமெடி பண்றது ரொம்ப பிடிக்கும். காமெடி நடிகர்களில் கவுண்டமணி- செந்தில் எனக்கு ரொம்ப பிடிககும். பெண்களில் கோவைசரளா பிடிக்கும். கவுண்டமணி-செந்திலை பார்த்தாலே சிரிப்பு வரும். டிவியில் அவர்கள் காமெடி சீன் போட்டால் மணிக்கணக்கானாலும் எழுந்து கொள்ளாமல் அப்படி என்ஜாய் பண்ணி பார்ப்பேன்.

காமெடி கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்களா?

இதுவரை அப்படியொரு சான்ஸ் கிடைக்கவில்லை. மேலும், எனக்கு நல்ல காமெடி சென்ஸ் இருப்பதால் டிவி நேயர்களை சந்தோசப்படுத்தும் காமெடி ரோல்களை எதிர்பார்க்கிறேன்.

தற்போதைய டிவி நேயர்களின் ரசனை எப்படி உள்ளது?

சென்டிமென்ட் கதைகளைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். அழுகாச்சியாக இருந்தால் அவர்களும் சேர்ந்து அழுறாங்க. அந்த அளவுக்கு சீரியல்களில் நடிப்பதை உண்மையென்றே நினைக்கிறார்கள். அதாவது சீரியலை, சீரியல் என்று நினைப்பதில்லை. என்னை சந்திக்கும் நேயர்கள்கூட, உன்னை அந்த பையன் விட்டுட்டு போயிட்டானே எப்படி நீ வாழப்போறே என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு யாரும் சீரியலை, ஆக்டிங் என்று எடுத்துக்காமல் நிஜமென்று ஃபீல் பண்ணுகிறார்கள். என்னதான் டெக்னாலஜி அறிவு அதிகமாக இருந்தபோதும் இப்படித்தான் கேட்கிறார்கள். மேலும் எனது நிஜ பெயர் யாருக்குமே தெரியாது. நான் சமீபத்தில் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.

சினிமா ஆசை?

சினிமா வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சீரியல்தான் பெஸ்டா தெரியுது. காரணம், சீரியல் என்றால் வருடக்கணக்கில் போய்க்கொண்டேயிருக்கும். முக்கியமா அவுட்டோர் பிரச்னை இல்லை. மாலை ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டிற்கு போய் விடலாம். ஆனால், சினிமா அப்படியல்ல. ஓரிரு மாதத்தில் ஒருபடம் முடிந்து விடும். அதன்பிறகு அடுத்த படம் தேட வேண்டும். அதுக்காக காத்திருக்க வேண்டும்.

அதனால் சினிமாவை முடிஞ்ச வரைக்கும் தவிர்த்து விடுகிறேன். ஏற்கெனவே ஒரு சில படங்களில் சின்னசின்ன ரோலில் நடித்திருக்கிறேன். படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதியும் வேடம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.