தேன் மற்றும் லவங்கப்பட்டையின் பொடி இரண்டையும் குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட முகம் பளிச்சென்று ஆகிவிடும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் - பக்டீரியாக்களை அழிக்கும். மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்தக் கலவை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு.
வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்னர் அதன் தோலை முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.
வைட்டமின் "சி' நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். மேலும் எலுமிச்சை சருமத்தைப் பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும். எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று புத்துணர்ச்சியாக இருக்கும்.
முகம் புத்துணர்வு பெறுவதற்கு சிறிது புதினா இலைகளை உபயோகிக்கலாம். முகத்தை நன்றாக கழுவிய பின்பு சிறிது நேரம் கழித்து புதினா சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து அது காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். நீங்களே அதன் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். பெரும்பாலான சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


