வீட்டு தோட்ட பராமரிப்பு


< மிளகாய்ச் செடியில் பூக்கள் பூத்திருக்கும்போது சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த தண்ணீரைச் செடியின் மீது தெளித்தால், வண்டுகள் மிளகாய்ச் செடியிலிருக்கும் பூக்களை மொய்த்துவிடும். இதனால், அத்தனை பூக்களும் காயாகிவிடும்.

< பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் அதன் மேல் பாகத்தை பாதிக்கும் மேல் வெட்டி விட்டு செடி வளர்க்க பயன்படுத்தலாம்.
< கறிவேப்பிலைச் செடிக்கு புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர்ப்பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் கறிவேப்பிலைக்கு பயன்படுத்தலாம்.
< முருங்கை மரத்தை கொல்லைப் புறத்தில் வளர்ப்பதைவிட வீட்டு வாசலில் வளர்த்தால் அதிகமாக முருங்கைக்காய் காய்க்கும். காரணம், சாலையில் போக்குவரத்தால் ஏற்படும் நில அதிர்வுகள்.
< ரோஜாச் செடிகளுக்கு வாழைப்பழத்தோலை நறுக்கிப் போட்டால் செடி நன்றாக வளரும். செழிப்பான பூக்களும் பூக்கும். அதேபோன்று பீட்ரூட்டின் தோலையும், வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாக போட வேண்டும்.
< செடிகளைச் சுற்றி ஆழமாக குழிவெட்டி அதில் அன்றாடம் வீட்டில் சேரும் குப்பைகளை முக்கியமாக சிறுபேப்பர் துண்டுகள், காய்கறித் தோல்கள் போன்றவற்றை இந்தக் குழிகளில் நிரப்பி மண்ணைப் போட்டு மூடிவிட்டால் அவை மக்கி சிறந்த உரமாகிவிடும். ஈரத்தைக் காத்துக் கொள்ளும் தன்மையின் காரணமாக கடுங்கோடையிலும் செடிகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும்.
< வீட்டுத் தோட்டத்தில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளை தூவி விடுங்கள். அவ்வளவுதான். பல நாட்களுக்கு வீட்டுத் தோட்டத்தில் எறும்பு நடமாட்டமே இருக்காது அதன் தொல்லையும் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...