மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

லாபம் தரும் சிப்பி காளான் வளர்ப்பு!

சமீப காலமாகவே  பெரும்பாலானோர் ஆரோக்கிய உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக தேடித் தேடி சிறுதானிய உணவுகளையும், ஆர்கானிக்

Updated On :21 ஜூன் 2016, 11:57 am

சமீப காலமாகவே  பெரும்பாலானோர் ஆரோக்கிய உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக தேடித் தேடி சிறுதானிய உணவுகளையும், ஆர்கானிக் வகை காய்கறிகளையும் விரும்பி உண்ணுகிறார்கள். அந்த வகையில் ஆரோக்கிய உணவில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டது காளான் உணவுகள். அதிலும் சைவ பிரியர்களுக்கு காளான் ஓர் அற்புத உணவாகவே மாறிவிட்டது எனலாம். காரணம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான  புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, சாம்பல் சத்து போன்றவையும் குறைந்த கொழுப்புச் சத்தையும் கொண்டது காளான். ஆனால் இந்த காளான் விலை சற்று கூடுதலாக இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அடிக்கடி வாங்கி சமைப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் கவலையைப் போக்கவே, தற்போது வீட்டிலேயே காளான் வளர்த்துக் கொள்ளும் பயிற்சியைக் கற்றுத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த சுகா தொண்டு நிறுவனத்தின் தலைவி உமாராஜ்.  இங்கே அவரது யோசனைகள்:

Story image

   ""காளான்களில் பட்டன் காளான், பால் காளான், சிப்பிக் காளான் என மூன்று வகைகள் உள்ளன. பட்டன் காளானை குளிர்ச்சியான இடங்களில்தான் வளர்க்க முடியும். பால் காளான் வளர்க்க பெரிய இட வசதி வேணும். ஆனால் சிப்பிக் காளானை வீட்டில் 10க்கு 10 இடம் இருந்தால் போதும் சுலபமாக வளர்க்கலாம். மொட்டை மாடியில் இடம் இருந்தால், சின்னதாக ஒரு கூரை அமைத்தும் வளர்க்கலாம்.

Story image

சிப்பிக் காளான் வளர்ப்பில், விதைகளைப் பயிரிட்ட 18-வது நாளிலிருந்து காளானை அறுவடை செய்யலாம். ஒரு முறை விதைத்த விதைகளில் இருந்து மூன்று முறை வரை அறுவடை செய்ய முடியும். சிறு முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே இந்த  சிப்பிக் காளான் வளர்ப்பை  சிறுதொழிலாகவும் எடுத்து செய்யலாம். மார்க்கெட்டில் சிப்பி காளானுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் நல்ல லாபம் பார்க்கவும் முடியும். இந்த சிப்பி காளான் வளர்ப்பில்  விதைத் தேர்வு, அதை வாங்குமிடம், விதைப்பு முறை, அறுவடை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ளலாம்''  என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.