நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புது உலகம் - சென்ற வார தொடர்ச்சி...

சாந்தி ரங்கநாதன், டி.டி. ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் டி.டி.கே. மருத்துவமனை மூலம் 25 ஆயிரம் பேரை குடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அவரின் பேட்டி தொடர்கிறது...

News image
Updated On :16 மார்ச் 2016, 5:25 am

சுமன்

சாந்தி ரங்கநாதன், டி.டி. ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் டி.டி.கே. மருத்துவமனை மூலம் 25 ஆயிரம் பேரை குடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அவரின் பேட்டி தொடர்கிறது...

குடியில் ஒருவர் வீழ்ந்தால் சுயபாதிப்பு, குடும்பப்பாதிப்பு, சமூகம் சார்ந்த பாதிப்பு ஆகியவை நேர்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்கிறார்.

Story image

இதிலிருந்து மீள என்னென்ன சிகிச்சை முறைகள்?

பல முறைகள் உள்ளன. எல்லாம் அனுபவத்தினாலும், ஆராய்ச்சியினாலும் கண்டுபிடிக்கப்பட்டவை!

மருத்துவ சிகிச்சை?

குடிப்பதை நிறுத்தும்பொழுது, கை நடுக்கம், தூக்கமின்மை, பசியின்மை, பதட்ட நிலை, போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கிறோம். சுமார் நான்கு, ஐந்து நாட்களில் உடல் நிலை சீராகத் தொடங்கும்.

மன ரீதியான சிகிச்சை?

குடிநோயாளியின் உடல் நலம் சீரானதும், மன ரீதியான சிகிச்சைகள் வழங்குகிறோம். இதில் சில அம்சங்கள் உள்ளன.

விளக்க உரைகள்: குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், குடிக்காமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாழ்க்கை முறையை மாற்றியமைக்கத் தேவையான கருத்துகள் தெளிவாக எடுத்துக் கூறப்படும்.

கலந்துரையாடல்: விளக்க உரையில் தரப்பட்ட வழிமுறைகளை குழுவாக கலந்து பேசி தம்முடைய வாழ்க்கைக்குப் பொருத்தமான மாற்றங்களை கண்டறிவார்கள்.

குழு பயிற்சி: சக நோயாளிகளுடன் தன்னுடைய அனுபவங்களையும், திட்டங்களையும் கேட்டறிவதன் மூலம் எதிர்காலத்தை திட்டமிடுதல்.

கவுன்சிலிங்: விசேஷ பயிற்சி பெற்ற ஆலோசகர்களுடன் தற்போதைய வாழ்க்கை நிலையையும், மாற்ற வேண்டியவற்றைப் பற்றியும் மனம் விட்டு பேசி தீர்வு காணமுடியும்.

பிறரின் அனுபவங்களைக் கேட்டறிதல்: குடிநோயிலிருந்து விடுபட்டு பல வருடங்களாகக் குடிக்காமல் இருப்பவர்கள் (ஏஏ குழுவினர்-அப்ஸ்ரீர்ட்ர்ப்ண்ஸ்ரீ அய்ர்ய்ஹ்ம்ர்ன்ள்) கடைப்பிடித்த வழிமுறைகளைப் பற்றி கேட்டறிந்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்!

குடும்பத்திற்கான பயிற்சி: குடி நோயைப் பற்றி அறிந்து சரியான விதத்தில் நோயாளிக்கு உதவ குடும்பத்தினருக்காக காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இரண்டு வாரத்திற்கு தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆதரவாளர்களுக்கான நிகழ்ச்சி: மற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நோயாளிக்கு தகுந்த உதவி தரத் தேவையான கருத்துகள் ஒரு மணி நேர நிகழ்ச்சி மூலம் விளக்கப்படும். இந்நிகழ்ச்சி மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் நடைபெறும்.

 இந்த மருத்துவ மனையில் மருந்துக்கடை, சிகிச்சை அறை, உடற்பயிற்சி அறை, தியான அறை, உணவு விடுதி, அனைத்து வசதிகளும் உள்ளன. வெளியிலிருந்து உணவு எடுத்து வர அனுமதி இல்லை. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அனுமதிக்கிறோம்.

தொடர் சிகிச்சை: சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பின் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு வருட காலத்திற்கு மருத்துவரையும் ஆலோசகரையும் சந்திக்க வேண்டியது அவசியம். இதற்கெல்லாம் தனிக்கட்டணம் எதுவும் இல்லை.

தங்கும் வசதி எங்களது மருத்துவமனையில் மூன்று வகையான தங்கும் அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் கட்டணம் வேறுபடுமே தவிர, எல்லா நோயாளிகளுக்கும் ஒரே வகையான சிகிச்சை முறைதான்! பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியோருக்காக இலவசப் படுக்கையறைகளும் உண்டு!

சிகிச்சை பெற விரும்புவோர் முன்னதாகவே தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அவசியமாக குடும்பத்தினருடன் வரவேண்டும். 

ஏதாவது சிறப்பு யுக்தி?

முதலில் "இன்று ஒரு நாள் நான் குடிக்காமல் இருக்க வேண்டும்' என்று குடி நோயாளி பிரார்த்தனை செய்ய வேண்டும். இது நல்ல பலனைக் கொடுக்கும்! ஒவ்வொரு நாளும் இந்தப் பிரார்த்தனை தொடர வேண்டும்! இது நல்ல மனோபலத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.