நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பண்​டைய மர​பு​களை கொண்​டா​டும் விசா​கா​ஹரி!​

நம்மு​டைய பண்​டைய கலாச்​சார வேர்​களை அழி​யா​மல் காப்​பாற்ற வேண்​டு​மென்ற நோக்​கத்​தில் இசை​யு​டன் ஹரி​கதா காலட்​சே​பம் நடத்​தி​வ​ரும் விசா​கா​ஹரி,​​ தொழில் ரீதி​யில் ஒரு சார்ட்​டட் அக்​க​வுண்​டண்ட்.​ அது​வும் தங்​கு​த​டை​

News image
Updated On :29 மார்ச் 2016, 7:26 am

பூா்ணிமா

நம்மு​டைய பண்​டைய கலாச்​சார வேர்​களை அழி​யா​மல் காப்​பாற்ற வேண்​டு​மென்ற நோக்​கத்​தில் இசை​யு​டன் ஹரி​கதா காலட்​சே​பம் நடத்​தி​வ​ரும் விசா​கா​ஹரி,​​ தொழில் ரீதி​யில் ஒரு சார்ட்​டட் அக்​க​வுண்​டண்ட்.​ அது​வும் தங்​கு​த​டை​யின்றி சர​ள​மாக பார்​வை​யா​ளர்​கள் புரிந்து கொள்​ளும் வகை​யில் ஆங்​கி​லத்​தில் கதா காலட்​சே​பம் நடத்​து​வது இவ​ரது தனிச்​சி​றப்​பா​கும்.​

Story image

அண்​மை​யில் ​ பெங்​க​ளூ​ரு​வில் சவு​டய்யா மெமோ​ரி​யல் ஹாலில் இவர் "மாத்ரு தேவோ பவா' என்ற தலைப்​பில் 90 நிமி​டங்​கள் தொடர்ந்து ஆங்​கி​லத்​தில் நடத்​திய ஹரி​க​தையை பார்​வை​யா​ளர்​கள் மெய்​ம​றந்து ரசித்​த​னர்.​

விசாகாஹரி சொல்கிறார்:

இது​வரை நான் ஹரி​கதா நடத்​திய நக​ரங்​க​ளி​லேயே பெங்​க​ளூரூ எனக்​கொரு புது​மை​யான அனு​ப​வத்தை அளித்​தது.​ அரங்கு நிறைய அமர்ந்​தி​ருந்த பார்​வை​யா​ளர்​கள் என்​னு​டைய ஒவ்​வொரு வார்த்​தை​யை​யும் கவ​னித்து ரசித்​தது எனக்​குப் பெரு​மை​யாக இருந்​தது.​

இன்​றைய உல​கத்​தி​ன​ருக்​குப் பண்​டைய இதி​காச அன்​னை​யர்​களை நினை​வு​ப​டுத்த வேண்​டு​மென்​ப​தற்​கா​கவே இந்த தலைப்பை தேர்ந்​தெ​டுத்​தேன்'' என்று கூறும் விசா​கா​வுக்கு ஆன்​மிக குரு இவ​ரது மாம​னார் ஸ்ரீகி​ருஷ்ண பிரேமி சுவா​மி​கள்​தா​னாம்.​ அவ​ரது கதா​கா​லட்​சே​பங்​க​ளைக் கேட்ட பிறகே தானும் காலட்​சே​பம் செய்ய வேண்​டும் என்ற ஆர்​வம் ஏற்​பட்​ட​தாம்.​ இவ​ரு​டன் அவ்​வப்​போது இவ​ரது கண​வர் ஸ்ரீஹ​ரி​யும் சேர்ந்து காலட்​சே​பம் நடத்​து​வ​துண்டு.​ ​

""என்​னைப் பொருத்​த​வரை சரா​சரி இந்​தி​யப் பெண்​க​ளைப் போன்​ற​து​தான் என்​னு​டைய வாழ்க்​கை​யும்.​ ஒரே ஒரு வித்​தி​யா​சம் நான் தினந்​தோ​றும் பயிற்சி செய்​வ​துண்டு. பயிற்​சிக்​காக தின​மும் குறிப்​பிட்ட நேரத்தை ஒதுக்கி வேலை​களை கவ​னிப்​பேன்.​ என்​னி​டம் படிக்க வரு​ப​வர்​க​ளுக்​குப் பாடம் நடத்​து​வேன்.​

நம்​மு​டைய கலா​சா​ரத்தை நம் குழந்​தை​கள் உணர வேண்​டும் என்​ப​தற்​கா​கவே காலட்​சே​பம் நடத்​து​கி​றேன்.​ நம்​மு​டைய பெரு​மை​களை நாம் நாள்​தோ​றும் இழந்து வரு​கி​றோம்.​ பெற்​றோர்​க​ளும் குழந்​தை​க​ளு​டன் செல​வி​டும் நேரத்தை குறைத்து வரு​கின்​ற​னர்.​ இந்​திய கலா​சா​ரத்​தின் வேர்​க​ளான நாம்,​​ எப்​படி உடை அணிய வேண்​டும்?​ எதை சாப்​பிட வேண்​டும்?​ என்​ப​தை​யெல்​லாம் மறந்து வரு​கி​றோம்.​ ​

என்​னு​டைய காலட்​சே​பத்​தின் மூலம் கல்வி மட்​டு​மல்ல பொழு​து​போக்​கை​யும் அளிப்​ப​தோடு குழந்​தை​க​ளி​டையே விழிப்​பு​ணர்​வை​யும் ஏற்​ப​டுத்த வேண்​டு​மென்​ப​து​தான் நோக்​க​மா​கும்.​ முன்​பெல்​லாம் குழந்​தை​கள் தங்​கள் உரி​மை​களை வெளிப்​ப​டுத்தி வந்​தார்​கள்.​ தற்​போது உல​கில் அனைத்து விஷ​யங்​க​ளை​யும் ​ கற்​ப​தில் ஆர்​வம் காட்டி வரு​கி​றார்​கள்'' ​ என்று கூறும் விசாகா,​​ தனக்​கென்று ஒரு கைபே​சி​யைக்​கூட இது​வரை வைத்​துக் கொள்​ளாம​லி​ருப்​ப​தும் ஆச்​ச​ரி​யம்​தான்.​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.