நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மலை​யேற்​றத்​தில் சாதனை படைத்த இரட்​டையர்!​​

ஐந்து கண்​டங்​க​ளி​லும் உள்ள ஏழு உய​ர​மான மலை​கள் அனைத்​தி​லும் ஏறி சாதனை படைத்த முதல் இரட்​டை​யர்​க​ளாக நூங்ஷி மற்​றும் தாஷி​மா​லிக்,​​ கின்​னஸ் உலக சாதனை புத்​த​கத்​தின் 60ஆவது பதிப்​பில் இடம் பெற்​றுள்​ள​

News image
Updated On :29 மார்ச் 2016, 7:23 am

அ. குமார்

ஐந்து கண்​டங்​க​ளி​லும் உள்ள ஏழு உய​ர​மான மலை​கள் அனைத்​தி​லும் ஏறி சாதனை படைத்த முதல் இரட்​டை​யர்​க​ளாக நூங்ஷி மற்​றும் தாஷி​மா​லிக்,​​ கின்​னஸ் உலக சாதனை புத்​த​கத்​தின் 60ஆவது பதிப்​பில் இடம் பெற்​றுள்​ள​னர்.​ அது மட்​டு​மல்ல வட மற்​றும் தென் துரு​வங்​க​ளில் நடக்​கும் பனி​ச​றுக்​குப் போட்​டி​யி​லும் வெற்​றி பெற்ற முதல் இரட்​டை​யர் என்ற பெரு​மை​யு​டன் "அட்​வென்​சர்ஸ் கிராண்ட் ஸ்லாம்' மற்​றும் "த்ரி போல் சேலஞ்ச்' போன்ற விரு​து​க​ளை​யும் பெற்​றுள்​ள​னர்.​

தாஷி மாலிக் சொல்​கி​றார்:​​ ""முதன் முத​லில் 18ஆவது வய​தில் நாங்​கள் மலை​யே​றும் பயிற்சி பெற விரும்​பி​ய​போது பயிற்​சி​யா​ளர்​கள் எங்​களை "எவ​ரெஸ்ட் இரட்​டை​யர்​கள்' என்று தமா​ஷாக கூறு​வ​துண்டு.​ இதுவே எங்​களை உல​கில் உள்ள உய​ர​மான மலை​கள் மீது ஏறு​வ​தற்கு உந்​து​த​லாக அமைந்​தது.​ இயற்​கை​யி​லேயே துணிச்​சலை வெளிப்​ப​டுத்​து​வ​தென்​பது ஒவ்​வொ​ரு​வ​ருக்​குள்​ளும் இருக்​கும் தணி​யாத ஆர்​வ​மா​கும்.​ மலை​யே​று​வது என்​பது ஆண்​க​ளுக்கே உரிய சாதனை என்ற கருத்தை மாற்ற விரும்​பி​னோம்'' என்​கி​றார் தாஷி மாலிக்.​

நூங்ஷி சொல்​கி​றார்:​​ "" பெண்​களை பொருத்​த​வரை பெற்​றோர் கண்​கா​ணிப்​பி​லேயே எப்​போ​தும் இருப்​பார்​கள்.​ துணிச்​ச​லான செயல்​களை செய்ய அவர்​கள் அனு​ம​திப்​ப​தும் இல்லை.​ அதி​லும்,​​ பெண்​கள் மலை​யே​று​வது என்​பது ஆபத்​தா​ன​தும் கூட.​ நாள் கணக்​கில் வார கணக்​கில் ஆண்​க​ளு​டன் தங்க வேண்​டி​யி​ருக்​கும்.​ அவர்​கள் தங்​கும் கூடா​ரத்​தி​லேயே ஒரு மூலை​யில் ரிஸ்க் எடுத்து தங்க வேண்​டும்.​

குறிப்​பாக மருத்​துவ உதவி,​​ பீரி​யட் போன்​றவை பெண்​களை பொருத்​த​வரை சவா​லான பிரச்​னை​யா​கும் ஆனா​லும் நாங்​கள் ரிஸ்க் எடுத்​தோம்.​ ​ இம​ய​மலை உச்​சி​யில் 23 ஆயி​ரம் அடி ​ உய​ரம் ஏறிய தினத்​தன்று மாலை என்​னு​டைய பீரி​யட் தொடங்​கி​யது.​ தாங்க முடி​யாத வலி.​ எப்​ப​டியோ சமா​ளித்து 11 மணி நேரத்​திற்கு பின் பாது​காப்​பாக எங்​கள் முகா​முக்கு வந்து சேர்ந்​தது மறக்க முடி​யாத அனு​ப​வம்'' என்​கி​றார் நூங்ஷி.​ அவ​ரைத் தொடர்ந்து தாஷி​மா​லிக் சொல்​வ​தா​வது,​​

""எங்​க​ளுக்​குள்ள கூடு​த​லான பிரச்னை எங்​கள் இரு​வ​ருக்​குமே பார்வை கோளாறு உண்டு.​ இரு​வ​ருமே "பவர் கிளாஸ்' அணி​ப​வர்​கள்.​ மலை​யே​றும்​போது பனிப்​பொ​ழிவு ஏற்​பட்​டால் தலை,​​ முகம் முழுக்க பனி படர்ந்து கண்​களை மறைக்​கும்.​ சரி​யான பாதை

தெரி​யாது ​ இருந்​தா​லும் சமா​ளித்​தோம்.​ ஒவ்​வொரு கண்​டத்​தி​லும் உள்ள உய​ர​மான மலை​கள் மீது ஏறி​ய​போது கிடைத்த அனு​ப​வங்​கள் மலை​யே​று​வது என்​பது பெண்​க​ளுக்​கும் சாத்​தி​ய​மா​ன​து​தான் என்ற எண்​ணத்தை வலுப்​ப​டுத்​தி​யது.​

அள​வுக்கு மீறிய குளி​ரில் உடல் ரீதி​யா​க​வும் மனோ ரீதி​யா​க​வும் நம்மை வலுப்​ப​டுத்​திக் கொள்ள முடி​யு​மென்ற நம்​பிக்கை அதி​க​ரித்​தது.​ சில நேரங்​க​ளில் எங்​க​ளு​டன் மலை​யேற்​றத்​துக்கு வந்த ஆண்​களை விட நேர்த்​தி​யா​கவே மலை​யே​றி​ய​தாக பயிற்​சி​யா​ளர்​கள் எங்​களை பாராட்​டி​ய​துண்டு'' என்​கி​றார் தாஷி​மா​லிக்.​

""நாங்​கள் இரு​வ​ரும் இந்த சாத​னை​யைப் படைக்க எங்​க​ளது பெற்​றோர் செல​வ​ழித்த தொகை ரூ.2.5 கோடி​யா​கும்.​ இதற்​காக அவர்​கள் பணத்​தைப் புரட்​டி​ய​தும் சவா​லான விஷ​யமே.​ அதே நேரத்​தில் இவ்​வ​ளவு செல​வ​ழித்து அவர்​கள் நம்மை அனுப்​பும்​போது தோல்​வி​ய​டை​யக் கூடாதே என்ற பய​மும் எங்​க​ளுக்​குள் இருந்​தது.​

நாங்​கள் பணக்​கார குடும்​பத்​தில் பிறந்​த​வர்​கள் அல்ல.​ இது​வரை அனைத்​துமே நினைத்​த​ப​டியே நடந்​தி​ருப்​பதே பெரிய சாதனை'' என்று இரு​வ​ரும் ஒரு​மித்த குர​லில் கூறி​னர்.​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.