நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மற்றவர் மதிக்கிற வேடங்களில் நடிக்க வேண்டும் : நடிகை காயத்ரி புவனேஷ்

சின்னத்திரை சேனல்களில் அவ்வப்போது நடிகை, தொகுப்பாளினி என இரு முகங்கள் கொண்டவர் காயத்ரி புவனேஷ். வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதைத் தவிர இவருக்கு நடனக் கலைஞர் என்ற இன்னொரு முகமும் உண்டு. இவரை தொடர்பு கொண்டோம்:

News image
Updated On :12 மே 2016, 7:32 am

ஸ்ரீ


சின்னத்திரை சேனல்களில் அவ்வப்போது நடிகை, தொகுப்பாளினி என இரு முகங்கள் கொண்டவர் காயத்ரி புவனேஷ். வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதைத் தவிர இவருக்கு நடனக் கலைஞர் என்ற இன்னொரு முகமும் உண்டு. இவரை தொடர்பு கொண்டோம்:

Story image

சின்னத்திரை பக்கம் வந்த அனுபவம்?

என் பெற்றோர் நான் டாக்டராகவோ, எஞ்சினீயராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்ப ட்டார்கள். ஆனால் எனக்கு சிறுவயதிலேயே மீடியாவுக்குள் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.  அதனால் ப்ளஸ் டூ முடித்த பிறகு என் சொந்த ஊரான மதுரையைவிட்டு பாட்டியோட உதவியோடு சென்னைக்கு வந்து விஸ்காம் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போதே ரேடியோ மற்றும் சில சேனல்களில் தொகுப்பாளினியாக ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

ராஜ் டி.வியில் நேரடி நிகழ்ச்சி செய்தேன். அதற்குப் பிறகு விஜய் டி.வியில் கனா காணும் காலங்கள் சீசன் 4ல நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு என்னோட பேஷனே மைக்தான். அதனால் மைக் மூலமா என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன்.

ஃப்ரீலேன்ஸராக சின்னத்திரையில் இருந்து வரும் நீங்கள் எப்போது முழுநேர நடிகையாகவோ, தொகுப்பாளினியாகவோ மாறப்போகிறீர்கள்?

நடிப்பு, தொகுப்பாளினி இதைத் தவிர டான்ஸ் ஸ்கூல்  வைத்து நடத்தி வருகிறேன். அதற்கே நேரம் சரியாக இருப்பதால் ஃப்ரீலேன்ஸர்தான் செட்டாகும்.

சீரியலில் பிசியாக இருந்தபோது, நடனப் பள்ளியை எப்படி நிர்வகித்தீர்கள்?

சீரியல்களின் நடிப்பு என்பது ஒரு கேள்விக்குறி. இது எத்தனை நாள் நீடிக்கும் என்றொரு எண்ணம் வந்தது. அதுவும் நடிப்புத்துறையை பொருத்தவரை பெண்களுக்கு ரொம்ப லிமிடெட் பீரியடுதான். அதற்குப் பிறகு  வாழ்க்கை முழுவதற்கும் ஏதாவது வேண்டும் என்றும் யோசித்தபோதுதான், "லெட் டான்ஸ்' என்ற பெயரில் டான்ஸ் பள்ளி ஆரம்பித்தேன். இங்கு டான்ஸ் மட்டுமில்லாம யோகா, ரூபா என்கிற ஃபிட்னஸ் எல்லாம் இருக்கு. முக்கியமாக திருமணமான பெண்கள் முதல் 60 வயது பெண்கள் வரை இதை செய்யலாம். இதனால் அவர்களது உடம்பை நல்ல ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும்.

நடிப்பை பொருத்தவரை எந்த மாதிரியான வேடங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

பெரிய கதாநாயகியாகணும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஒரு கேரக்டரில நான் வந்தால், அதில் ஏதாவது மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கணும். முக்கியமாக பேமிலி ரோலா இருக்கணும்.

அதேபோன்று டிவியில வில்லியா நடிச்சாதான் சீக்கிரம் ரீச் ஆகலாம்னு சொல்றாங்க. ஆனால் எங்கள் வீட்டில் வில்லியாக நடிக்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் வில்லியாக நடிக்கிறவங்களைப் பாத்தால் நாங்களே திட்டுவோம். அதனால மத்தவங்க மதிக்கிற மாதிரியான, பாராட்டுகிற வேடங்கள் வந்தால் நடி போதும் என்றார்கள்.

இப்போதைய தொடர்களில் தவறான உறவுமுறைகளை சொல்லும் கதைகள் அதிகம் வருவது பற்றி?

அது எங்களுக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் மற்றவர்களிடம் எதிர்ப்போ, கருத்தோ சொல்லும் இடத்தில் நாங்கள் இல்லை. மேலும், வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து அந்த மாதிரியான தொடர்களை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். அதேபோன்று மது அருந்துகிற மாதிரியான  சீன்களையும் கூட தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.