மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உலகின் இரண்டாம் அழகி!

உலகின் இரண்டாம் அழகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 5:53 am

உலகின் இரண்டாம் அழகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சில பாலிவுட் பிரபலங்களை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் பிரியங்கா சோப்ரா. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட்டிற்கு சென்றார். அங்கு மிகவும் பிரபலமான "குவாண்டிகோ' எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து, ஹாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் பிரபல பஸ்நெட் இணையதளம் சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் பிரியங்கா சோப்ரா 2-ஆம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் பாப் பாடகியும், நடிகையுமான பியான்ஸ் முதலிடத்தை தட்டிச் சென்றார்.
ஹாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா 2-ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.