நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாசாவுக்குச் சென்ற கிராமத்து மாணவி

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை முன்னோடியாக நினைத்து, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வுகூடத்துக்கு செல்ல வேண்டுமென்று

News image
Updated On :8 நவம்பர் 2017, 4:44 pm

பூா்ணிமா

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை முன்னோடியாக நினைத்து, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வுகூடத்துக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்ட ஆஷ்னா சுதாகர் (27) அண்மையில் தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
கோழிக்கோடு, கொடுவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆஷ்னாவின் பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே கல்வியில் ஆர்வமாக இருந்தாலும், ஆஷ்னாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு. 2008-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் நைனிதாலில் உள்ள ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வி.எஸ்.எஸ்.சி. மூலம் அமெரிக்காவில் உள்ள நாசாவில் குறிப்பிட்ட எல்லைக்குள் வசிக்கும் உரிமை அடிப்படையில் பயிற்சி பெற விண்ணப்பித்தார்.
கடுமையான நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் இவரது ஆய்வு கட்டுரைகளைப் பரிசீலித்து, மகாராஷ்டிரத்தில் உள்ள நாசா விண்வெளி பள்ளியில் 15 நாள் பயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது. தொடர்ந்து "இன்டர்ன்ஷிப்' அனுமதியின் பேரில் நாசாவுக்கு மூன்று மாத காலம் பயிற்சிக்குச் சென்று கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பியுள்ளார். 
தன்னுடைய கனவு நனவானது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள ஆஷ்னா, மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மீண்டும் நாசா செல்லவுள்ளார். தற்போது செங்கனாச்சேரி என்.எஸ்.எஸ். இந்து கல்லூரியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வரும் ஆஷ்னா, எழுதுவதிலும் நடனத்திலும் கூட ஆர்வமிக்கவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.