இது புதுசு
ராஜ்யசபா உறுப்பினரும், குத்துச்சண்டை வீராங்கணையுமான மேரிகோம். 2006 -ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சியளிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார்.


ராஜ்யசபா உறுப்பினரும், குத்துச்சண்டை வீராங்கணையுமான மேரிகோம். 2006 -ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சியளிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். இந்தியாவில் உள்ள 21 அறக்கட்டளைகளுக்கு விதிமுறைகளை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அந்த அறக்கட்டளைகளில் ஒன்றான மேரிகோம் அறக்கட்டளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பில் உள்ளது.
2014 - ஆம் ஆண்டு சில்பா ஷெட்டி கடைசியாக நடித்த திஸ்கியான் படத்திற்குப் பின் திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்தாலும், முறையாக நடன பயிற்சி பெற்றவர் என்பதால் அடிக்கடி மேடை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அண்மையில் அவரது ரசிகர்கள் அதிசயிக்கும் வகையில் சூப்பர் டான்சர் இரண்டாவது இறுதிகட்ட ரியலிடி ஷோவில் பெல்லி நடனம் ஆடி மகிழ்வித்துள்ளார். ""புதுவகை நடனங்களை கற்பதில் ஆர்வமுற்ற நான் இதற்காக ஒரு வாரம் தினமும் 2 மணி நேரம் பயிற்சி பெற்றேன்'' என்கிறார் சில்பா.
நாகரீக உடைகள் அணிவதில் ஆர்வமுள்ள பாலிவுட் நடிகை யாமி கவுதம், ஜென் நெக்ஸ்ட், அமேசான் நிறுவனங்கள் கோடை - இளவேனில் காலத்திற்காக தயாரிக்கும் ஆடைகளுக்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட யாமிகவுதம்தான், வெளிநாட்டு நிறுவன ஆடை தயாரிப்பு விளம்பரங்களுக்காக ஒப்பந்தமாகியுள்ள முதல் பாலிவுட் நடிகையாவார்.
முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை தெலுங்கில் திரைப்படமாகிறது. குழந்தை பருவத்தில் தொடங்கி நடிகராகி பின்னர் அரசியலில் நுழைந்து முதல்வரானது வரை மூன்று பகுதிகளாக எடுக்கப்படும் இப்படத்தில், என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்க, அவரது மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கிறாராம்.
கரண்ஜோகரின் "சித்தாத்' படத்தில் சஞ்சய் தத்துடன் ஸ்ரீதேவி நடிப்பதாக இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஸ்ரீதேவி இறந்துவிடவே, அவருக்கு பதில் மாதுரி தீக்ஷித் ஒப்பந்தமாகியுள்ளார். 1993-ஆம் ஆண்டு சஞ்சய் தத் - மாதுரி தீக்ஷித் நடித்து வெளியான "கல்நாயக்' படத்திற்கு பின் மீண்டும் சஞ்சய் தத்துடன் சேர்ந்து நடிப்பதில்லை என்று மாதுரி முடிவெடுத்ததால், "சித்தாத்' படத்திலிருந்து சஞ்சய் தத் நீக்கப்பட்டுள்ளார். சஞ்சய் தத் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்படும் திரைப்படத்தில் கூட சஞ்சய் தத்துடன் தன்னை சம்பந்தப்படுத்தி வந்த காட்சியையும் எடுக்க வேண்டாம் என்று இயக்குநர் ராஜ்குமார் ஹிராணியிடம் மாதுரி கேட்டுக் கொண்டாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...