இல்லத்தரசிகளாக இருக்கும் ஒவ்வொருவரும் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளவும், வீட்டில் இருந்தபடியே வருமானத்தை உருவாக்கவும் முடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. அதனால் முயற்சித்துப் பாருங்கள் தோழிகளே'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
சாப்ட் மஞ்சள் துணி
வாகனங்களின் கண்ணாடிகளை துடைக்க, கம்ப்யூட்டர் துடைக்க, எலக்ட்ரானிக் சாதனங்களை துடைக்க என மஞ்சள் துணி பயன்படுகிறது. இந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் மென்மையான துணிக்கு தேவை எப்போதும் உண்டு. இதற்கு ரூ. 10,000 முதலீடு செய்தால் போதும். இதற்கு தேவையான ஓவர்-லாக் மிஷின், மஞ்சள் நிற துணி என தேவையான பொருள்களை வாங்கி தேவையான அளவில் கத்தரித்து தயாரிக்க வேண்டும். இதற்கு பயிற்சி தேவையில்லை, ஓவர்-லாக் மிஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று பயிற்சியும் அளித்துவிடுவார்கள். இதனை, மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்யலாம். நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் இது.
எம்பிராய்டரிங் செய்தல்
தற்போது எம்பிராயிடரிங் பெரும்பாலும் மிஷின் மூலமாகவே செய்யப்
படுகிறது. இதற்கு தேவையும், வரவேற்பும் அதிகமுள்ளதால் எப்போதும் வருமானம் தரும் தொழில் இது. இதற்கு ரூ. 6000 முதல் ரூ. 10,000 வரை முதலீடு தேவைப்படும். மிஷின் வாங்கும்போது தரப்படும் கேட்லாக்கை வைத்தே டிசைன் செய்யலாம். முதலில் உங்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு அதனை வைத்து மற்றவர்களுக்கு காண்பித்து ஆர்டர் பிடிக்கலாம். வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இது மனதிற்கு அமைதியைத் தரும் தொழில். நல்ல வருமானமும் கிடைக்கும்.
சணல் பை தயாரிப்பு
சணலைத் தொட்டவர்கள் எப்போதும் சோடை போனதில்லை என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. உங்களால் ரூ. 25,000 வரை முதலீடு செய்ய முடியும் என்றால், தைரியமாக இந்தத் தொழிலில் இறங்கலாம். ஆனால் இதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே இத்தொழிலை செய்யலாம். திருமண ஆர்டர்கள் பிடித்துவிட்டால், வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கான பைகள் தயாரிக்கலாம். இதன் மூலம் நீங்களும் நாலு பேருக்கு வேலை கொடுக்க மூடியும். நல்ல வருமானம் தரும் தொழில் இது. எப்போதும் இதற்கு தேவை இருந்து கொண்டே இருக்கும். சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


