நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஜரிகை புடவைகளைப் பாதுகாக்க !

பட்டுப் புடவை போன்ற விலையுர்ந்த புடவைகளை வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

• பட்டுப் புடவை போன்ற விலையுர்ந்த புடவைகளை வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். 

• விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும்.

• புடவையை அணிந்து கழற்றியவுடன் மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தும்.

• சாப்பிடும் போது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடவும்.

• வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். 

• ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயனப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது.

• வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

• விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.

• டிஷ்யு , பனாரஸ் போன்ற புடவைகளை மடித்து வைத்தால் விரைவில் மடிப்பில் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

• ஜர்தோசி, சமிக்கி வேலைப்பாடு உள்ள புடவைகளை வெள்ளை பருத்தித் துணியில் சுற்றி வைக்க வேண்டும். 

• காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

• நிறைய புடவைகளை ஒரே பெட்டியிலோ, பீரோவிலோ அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது. இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.

• ஷிபான் புடவைகளை ஹாங்கரில் தொங்கவிட வேண்டும்.

• சமிக்கி வேலைப்பாடு உள்ள புடவைகளை பிரஷ் போட்டு துவைக்காமல், சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசினால் போதுமானது. 
- எஸ்.சரோஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.