வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இது புதுசு

16 வயதில் "திரிசூல்' படத்தின் மூலம் அறிமுகமான பூனம் தில்லான், 40 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

News image
Updated On :20 ஜூன் 2018, 6:19 am

அருண்

56 வயதில் முனைவர் பட்டம் பெற்ற நடிகை

16 வயதில் "திரிசூல்' படத்தின் மூலம் அறிமுகமான பூனம் தில்லான், 40 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 56 வயதாகும் பூனம் தில்லான், தன் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் எம்பிஏ பட்டம் பெற்றதோடு, இரண்டு கவுரவ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ""நீங்கள் நினைத்ததை சாதிக்க வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை'' என்று கூறும் பூனம் தில்லான், தற்போது சோனி டிவியில் ஒளிப்பரப்பாகும் "தில் ஹி தோஹை' என்ற தொடரில் நடித்து வருகிறார்.


ஆங்கில படங்களில் இந்தி டப்பிங் பேசும் கஜோல்!

"அவெஞ்சர்ஸ்', "டெட்பூல்' போன்ற ஆலிவுட் படங்களை இந்தியில் டப்பிங் செய்தபோது பாலிவுட் நடிகர்களை ரண்வீர்சிங், ராணா டகுபதி ஆகியோரை டப்பிங் பேச வைத்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையறிந்த டப்பிங் பட விநியோகஸ்தர்கள் "இன்கிரடிபிள் 2' படத்தில் எலாஸ்டிகேர்ள் என்ற பாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை கஜோலை இந்தியில் பின்னணி பேச வைத்துள்ளனர். மேலும் பல பாலிவுட் நடிக- நடிகைகள் இப்போது பின்னணி பேசுவதில் ஆர்வம் காட்டுகிறார்களாம்.


ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

""தெலுங்கு படங்களில் அம்மா வேடத்தில் நடித்துவரும் என்னை "காலா' படத்தில் நடிக்க அழைத்தபோது, ரஜினிக்கு அம்மாவாக நடிக்கவே என்னை ஒப்பந்தம் செய்திருப்பதாக நினைத்தேன். படப்பிடிப்பு துவங்கிய போதுதான் ரஜினி என்னை அழைத்து, ""இந்தப் படத்தில் எனக்கு ஜோடி நீதான்'' என்று சொன்னபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. திரைத்துறையில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதால் "காலா' படம் முடியும் வரை நான் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதை என் குடும்பத்தாரிடமோ, என் குழந்தைகளிடமோ சொல்லவே இல்லை'' என்கிறார் ஈஸ்வரி ராவ். 


கிராமங்களைத் தத்தெடுக்கும் நடிகை!

நடிப்பு தொழிலுக்கு அடுத்து பெண்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டும் பாலிவுட் நடிகை ஈஷா குப்தா, உத்தர பிரதேசம் பிஜாநூர் மாவட்டத்தில் இரு கிராமங்களை தத்தெடுக்க உள்ளார். ""ஒவ்வொருவருக்கும் கல்வி அளிப்பது அவசியமாகும். சிறு நகரங்களில் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் இல்லை. அதனால் இரு கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்கான வசதிகளையும், ஆசிரியர்களையும் நியமிக்க திட்டமொன்றை ஏற்படுத்தியுள்ளேன்'' என்கிறார் ஈஷா குப்தா.


வீட்டில் தோட்டம் அமைக்க யோசனை!

வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வமுள்ள பாலிவுட் நடிகை ரிச்சா சட்டாவுக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் சமூக அக்கறையுடன் செயல் படுவதில் விருப்பம் அதிகம். அண்மையில் மும்பை மேற்கு புறநகர் பகுதியில் புதிய வீட்டில் குடியேறிய அவர், வீட்டிலேயே இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளாராம். ""பூச்சிக்கொல்லி மருந்தற்ற இயற்கையான காய்கறிகளைப் பயிரிடுவது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, சமைத்து சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது'' என்கிறார் ரிச்சா சட்டா.


சூப்பர் ஹீரோயினாக தீபிகா படுகோன்!

கடந்த ஆண்டு வெளியான கால்கேடட் நடித்த ஆங்கிலப் படமான "ஒன்டர் உமன்' பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் முதன்முறையாக ஒரு பெண்ணை சூப்பர் ஹீரோயினாக மையப்படுத்தி படமெடுக்க பாலிவுட்டில் தயாரிப்பாளர் ஒருவர் முன் வந்துள்ளார். ரூபாய் 300 கோடியில் தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தில் தீபிகா படுகோன், சூப்பர் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.