ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-12

நாட்டில் உள்ள பெண்கள் என்ன தொழில் செய்யலாம் என்று நாங்கள் நிறைய ஐடியா கொடுத்துக் கொண்டே போகலாம்.

News image
Updated On :20 ஜூன் 2018, 6:01 am

ஸ்ரீதேவி

நாட்டில் உள்ள பெண்கள் என்ன தொழில் செய்யலாம் என்று நாங்கள் நிறைய ஐடியா கொடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் உங்களுக்கு இதனால் ஏதாவது நன்மை கிடைத்ததா என கடிதம் மூலமாகவோ, தெலைபேசி மூலமாகவோ எங்களுக்குத் தெரியப்படுத்தினால். அதன் மூலம் உங்களுக்கு மேலும் பல நல்ல தகவல்களைத் தருவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். நாம் இதுவரை இத்தொடரில் பெரும்பாலும் இயற்கை சார்ந்த தொழில்கள் பற்றியே பார்த்து வந்தோம். சமீபத்தில், தமிழக அரசு வருகிற 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பலவற்றிற்கு தடைவிதித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின் இந்த அறிவிப்பை நாம் நல்லபடியாக பயன்படுத்தி பேப்பர் கூழ் கொண்டு என்னென்ன பொருட்கள் செய்யலாம் என பார்க்கலாம். 
சாதாரணமாக சாலையோரங்களில் ஒருசில பிரிவு மக்கள் பொம்மைகள் செய்வதைப் பார்த்து இருப்போம். அதாவது சிறியது முதல் பெரிய அளவிலான பொம்மைகள் மற்றும் சாமி சிலைகள் என பலவற்றை அவர்கள் செய்வதையும், கற்பனை திறனுடன், கலை நயத்துடன் வண்ணங்கள் பூசுவதையும் பார்க்கும் போது ஏதோ மிக கடினமாக இருக்குமோ என தோன்றும். இதற்கு கொஞ்சம் பயிற்சியும், கற்பனைத் திறனும் இருந்தாலே போதும்; நாமும் பொம்மைத் தொழிலில் ஈடுபடலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
பொம்மை செய்தல்: பொம்மை செய்ய தேவையான அச்சுகள் பல வடிவங்களில் உள்ளன. இந்த அச்சுகள் இரண்டு துண்டுகளாக காணப்படும். அவற்றை வாங்கிவந்து அதில், சில மூலப் பொருள்கள் கொண்டு சப்பாத்தி மாவு போன்று தயார் செய்து, பொம்மை அச்சின் மேல் பகுதியில் வைத்து அழுத்தி எடுத்தால், பொம்மை தயார். பின்னர், நன்கு காயவிட்டு பின் நமக்கு பிடித்த வண்ணத்தில் வர்ணம் பூச வேண்டும். இந்த வகையில், தலையாட்டி பொம்மை, மனித உருவங்கள்,சாமி சிலைகள், மிருக உருவங்கள் , குழந்தைகளுக்காக கார்ட்டூன் பொம்மைகள் என பலவற்றைச் செய்யலாம். இவை எல்லாவற்றிற்கும் அச்சுகள் உள்ளன. நமக்கு ஆர்வமும், கற்பனைத் திறனும் இருந்தால் போதும் வீட்டில் இருந்தபடியே செய்து பணம் ஈட்டலாம். இவற்றை கோயில்கள் உள்ள இடங்களில் விற்பனை செய்யலாம். நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ணஜெயந்தி போன்ற பண்டிகை நாள்களில் சாமி சிலைகள், பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
பூந்தொட்டி செய்தல்: வீட்டின் உள்ளே வைக்க செயற்கை பூந்தொட்டி செய்யலாம். இதற்கு மேலே குறிப்பிட்டுள்ளது போல் கலவையைத் தயார் செய்ய வேண்டும். பிறகு அதனை பூந்தொட்டி வடிவில் அல்லது பெரிய பலூன் மேல் வைத்து தொட்டி வடிவில் அதன் மேல் பரப்பி விடவும். பின் காய விடவும். பூந்தொட்டிக்கு வெளிப்புறம் டிசைன் தேவையெனில், இலைகள் போல் தனியே தயார் செய்து தொட்டி முழுவதும் ஒட்டலாம். பின் காய்ந்த பின் தேவையான வண்ணங்கள் பூசி வைக்கவும். இதே போன்று ஃப்ளவர் வாஷ், பேனா ஸ்டாண்ட், பேப்பர் ட்ரே என பலவகையான பொருட்களை நம் கற்பனைக்கு ஏற்றாற்போல் செய்து விற்கலாம். 
குப்பைக் கூடை தயாரிப்பு: இதை காகித கூழ் வைத்தும் தயாரிக்கலாம் அல்லது பழைய செய்தித் தாள்கள் வைத்தும் தயார் செய்யலாம். இதை அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தலாம். இதற்கு 11,18 லேயர் பேப்பரை மைதா பசை கொண்டு ஒட்ட வேண்டும் பின் காய விடவும். காய்ந்த பின் அதன் மேல் துணி ஒட்டி தயார் செய்யவும். இதை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யலாம்.
கைகளால் செய்யும் பேப்பர் அண்ட் போர்டு: கைகளால் செய்யக் கூடிய பேப்பர் மற்றும் போர்டுக்கு எப்போதும் மவுசு அதிகம். விலையும் அதிகம். இதற்கு தேவைப்படும் பயிற்சி எடுத்து வீட்டிலிருந்தே செய்து பணம் சம்பாதிக்கலாம். முன்பெல்லாம் பேப்பர் உடன் கொஞ்சம் வெந்தயம் போட்டு ஊறவிட்டு பின் அரைத்து காகித கூழ் செய்து அதில் அன்ன கூடை, சின்ன கிண்ணம் என தயார் செய்வோம். அதையே இப்பொழுது ரெடிமேடாக கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு தயார் செய்கிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.