காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆரோக்கிய உணவுகள்: கோவைக்காய் பச்சடி

News image
Updated On :1 மார்ச் 2018, 9:54 am

DIN

தேவையானவை:

கோவைக்காய் - 200 கிராம்
வெங்காயம் - 3
மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பூண்டு - 1 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 2 மேசைக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோவைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும். தேங்காய்த் துருவல், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நறுக்கிய கோவைக்காய் துண்டுகளைப் போட்டு, போதிய அளவு நீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், மிளகாய் அரைத்த மசாலா, புளிக்கரைசல், உப்பு ஆகியவற்றை சேர்த்து தொடர்ந்து வேக வைக்கவும். கலவை நன்கு வெந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு ஏற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.