ஆரோக்கிய உணவுகள்: புதினா ஆப்பம்

புதினா இலைகளை சிறிது எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஆரோக்கிய உணவுகள்: புதினா ஆப்பம்
Updated on
1 min read

தேவையானவை:

புதினா இலை - 1 கைப்பிடி அளவு
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1/2 கிண்ணம்
சமையல் சோடா - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினா இலைகளை சிறிது எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊற வைத்து மைய்யாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் புதினா விழுது, தேங்காய்ப் பால், உப்பு, சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை மாவை நன்கு கலக்கி வைக்கவும். அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆப்பச் சட்டியின் எல்லா பகுதிகளிலும் பரவுமாறு சுழற்றி பின்னர் மூடி வைத்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். இத்துடன் தேங்காய்ப் பால், சட்னி,  உருளைக்கிழங்கு குருமா வைத்துச் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com