ஆரோக்கிய உணவுகள்: மரவள்ளிக்கிழங்கு போண்டா
மரவள்ளிக்கிழங்கின் தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.


தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
வெங்காயம் - 3
மிளகாய் - 5
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
சோம்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கின் தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி, சிறிது வதக்கிக் கொள்ளவும். கடலை மாவையும் அரிசி மாவையும் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மசித்த மரவள்ளிக்கிழங்கு, வதக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் சீரகம், சோம்பு, அரிந்த கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். கலவையை நடுத்தர உருண்டைகளாகப் பிடித்து மாவில் தோய்த்து, நன்கு காய்ந்த எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...