நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து அதோடு தேங்காய்ப் பால், வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பருகலாம். இதேபோன்று ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம் பழம் இவற்றையும்
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து அதோடு தேங்காய்ப் பால், வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பருகலாம். இதேபோன்று ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம் பழம் இவற்றையும் அரைத்துத் தயாரிக்கலாம்.
பேரீச்சம்பழத்தை ஆறு மணி நேரம் ஊற வைத்துப் பிசைந்து, தண்ணீர் கலந்து பருகலாம்.
கேரட் துருவல், தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், சீரகத் தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொண்டு, புடலங்காய் பிஞ்சை 3 அங்குலம் நறுக்கி உள்ளிருக்கும் விதைகள் மற்றும் நார்களை நீக்கி, தயார் செய்து வைத்துள்ள கேரட் கலவையை உள்ளே வைத்து இருபுறமும் கொத்துமல்லித் தழைகளை வைத்து மூடி, ஆவியில் வேக வைத்தால், சுவையான கொழுக்கட்டை தயார்.
உருண்டையாக பெரிதாக உள்ள தக்காளிப் பழத்தை நான்காகக் கீறி, அதனுள் தேங்காய்த் துருவல், சீரகத் தூள், மிளகுத் தூள், கொத்துமல்லித் தழை ஆகியவற்றைக் கலந்து வைக்கவும். இந்த சுவையான தக்காளி பூரணத்தை அப்படியே சாப்பிடலாம்.
பொட்டுக்கடலையை மாவாக அரைத்து ஒரு குவளைத் தண்ணீரில் மூன்று தேக்கரண்டி மாவைக் கலந்து நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் கலந்து பானமாகப் பருகலாம்.
பீட்ரூட்டைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச்சாறு, உப்பு சேர்த்தால் உடனடி பீட்ரூட் ஊறுகாய் தயார்.
- கொ.மா.கோதண்டம் எழுதிய "இயற்கை மருத்துவம்' நூலிலிருந்து.