2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஆரோக்கிய உணவுகள்: பூசணிக்காய் காராமணி கூட்டு

தேங்காய்த் துருவல், தனியா, இஞ்சி, பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். காராமணியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:43 am

DIN

தேவையானவை:

பூசணிக்காய் - 300 கிராம்
காராமணி - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா - 3 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

தேங்காய்த் துருவல், தனியா, இஞ்சி, பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். காராமணியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காயை சேர்த்து வேக விடவும். கலவை நன்கு வெந்ததும் மசாலா விழுது, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வாசனை வந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.