

நோபல் பரிசு இதுவரை 49 முறை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேடம் க்யூரி மட்டுமே. 1903-ஆம் ஆண்டு அறிவியல் சார்ந்தும், 1911-இல் ரசாயனம் சார்ந்தும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பெர்தா வோன் சட்னர்: ஆஸ்திரிய அரசு குடும்பத்தில் பிறந்தவர். போர்களை அறவே வெறுத்தவர். மாறாக சமாதானத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தவர். நோபல் பரிசு வழங்கிய டாக்டர் நோபலிடம் சமாதானத்துக்கு பரிசு வழங்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திக் கூறி வந்தார். 1905-இல் இவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான். மேலும் மேடம் க்யூரி (1900)க்குப் பின் இரண்டாவதாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி இவர்! இவர் ஒரு நாவலாசிரியர். இவர் எழுதிய கஅவ ஈஞரச வஞமத அதஙந என்ற நாவல் மிகமிகப் பிரபலம். இதற்கு 37 தொகுதிகள் வெளியாகியுள்ளன. அந்தக் காலத்திலேயே 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
டோரிஸ் லெசிங்: 88 வயதில், 2007-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த டோரிஸ்லெசிங். மிக வயதான காலத்தில் நோபல் பரிசைப் பெற்றவரும் இவர்தான்.
வாங்காரி மாத்தாய்: 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி கென்யாவின் நெய்ரி ஊரில் பிறந்தார். இவர் கென்யாவில் அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை தூண்டிவிட்ட வீராங்கனை! 1977-இல் "க்ரீன் பெல்ட் மூவ்மென்ட்' என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் கென்யாவின் பல இடங்களில், பெண்களின் உதவியுடன் 2 கோடி மரங்களை நட்டு வளர்த்தார். இவருக்கு கென்ய அமைச்சரவையில் உதவி அமைச்சர் பதவி கிடைத்தது. சுற்றுச்சூழல் இயற்கைச் செல்வம் மற்றும் காட்டு வாழ்க்கை சார்ந்த துறை இது! அதே சமயம் கென்ய நாட்டுப்புறப் பெண்கள், குடும்பச் சூழலில் படும் அவதிகளைக் களையவும் கடும் முயற்சி எடுத்தார். பலன் இவருக்கு 2004-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண் இவர்தான். 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி இவர் காலமானார்.
செல்மா லாஜர்லாஃப்: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த செல்மா லாஜர்லாஃப் இலக்கியத்துக்காக 1909-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான். 1996-இல் இவர் எழுதிய "ஜெருசலம்' நாவல் அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவர் எழுதிய சிறந்த நாவல்களில் "ஜெருசல'மும் ஒன்று!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.