வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இதுபுதுசு

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியை தொடர்ந்து, அவரது  தங்கை குஷியை படத்தில் நடிக்க வைக்க  ரகசிய ஏற்பாடுகள்  நடந்து வருகின்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 7:57 am

அருண்


ஜான்வியை தொடர்ந்து நடிக்க வரும் குஷி

Story image

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியை தொடர்ந்து, அவரது  தங்கை குஷியை படத்தில் நடிக்க வைக்க  ரகசிய ஏற்பாடுகள்  நடந்து வருகின்றது. குஷி நடிப்பதற்கேற்ப  கதையை உருவாக்க கூறியுள்ள தயாரிப்பாளர் கரண் ஜோகர், அவரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளதோடு,  முதல் படத்தில்  அவருக்கு ஜோடியாக  நடிக்க  ஷாரூக்கான் மகன் ஆர்யனை தேர்வு   செய்துள்ளாராம்.

இயற்கையை விரும்பும் நடிகை!

Story image

பாலிவுட் நடிகை யாமிகவுதம், தன் வாழ்க்கை, சாப்பிடும் உணவு அனைத்துமே இயற்கையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதுபோல்,  சுற்றுச் சூழலும் இயற்கையாக இருக்கவேண்டுமென்பதற்காக,  இமாச்சல பிரதேசத்தில்  உள்ள தன்னுடைய  வீட்டையும் பசுமை வீடாக மாற்ற  தீர்மானித்துள்ளாராம்.  ""இந்த பசுமை வீடு பயனுள்ளதாக  இருப்பதோடு,  நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வெடுக்க வரும்போது  எனக்கு  புத்துணர்வை அளிக்கும்''  என்கிறார் யாமிகவுதம்.

நல்ல வழிகாட்டி தேவை!

Story image

"ஹேப்பி  பாக்  ஜாயேகி'  படத்திற்கு  பின்  "காக்டெயில்'  என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மாடலும், பாலிவுட் நடிகையுமான டயானா பென்ட்டி,  ""இந்தி திரையுலகம்  எனக்கு புதிது  என்பதால்   நல்ல படங்களை தேர்ந்தெடுக்கவும், வழிகாட்டவும்  யாரும்  இல்லை. இங்கு  எனக்கு தெரிந்தவர்களும் குறைவு. அதனால் யார் என்ன சொல்கிறார்களோ  அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்ற நான் தயாராக இல்லை. "காக்டெயில்' படத்திற்கு  பின் நல்ல  வாய்ப்புகள் கிடைக்குமென  நம்புகிறேன்'' என்கிறார் டயானா  பென்ட்டி.

வெற்றி தோல்வியைப்  பற்றி சிந்திப்பதில்லை!

""என்னுடைய அம்மா சொல்வது போன்று  நல்லவை  என்றுமே  தோல்வி அடைவதில்லை. நான் விதியை நம்புகிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும், தொழில் ஆகட்டும். இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறேன். ஒவ்வொன்றிலும் கிடைக்கும் அனுபவங்கள் போன்று எல்லாருடைய வாழ்க்கையிலும் வெற்றி தோல்வி நிச்சயமாக  இருக்கும் என்று நம்புவதால் நான் எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை. ஒவ்வொரு தவறு மூலமாகவும் வெற்றியை கண்டுள்ளேன்'' என்று கூறுகிறார்  ஹூமா குரேஷி.

இயக்குநரான கங்கனா ரணாவத்!

Story image

"மணிகர்னிகா', "தி குயின்  ஆஃப் ஜான்சி'   படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் கங்கனா  ரணாவத், தற்போது  அப்படத்தின்  இயக்குநர்   கிரிஷ்   ஜகர்லாமுடி, ஹைதராபாத்தில் என் டிஆர் பற்றிய வாழ்க்கை படத்தை எடுப்பதில் மும்முரமாக இருப்பதால், படத்தை இயக்கும் பொறுப்பை கங்கனாவே ஏற்றுள்ளார். ஏற்கெனவே எடுக்கப்பட்ட  சில காட்சிகளை ரீ ஷூட்டிங் செய்வதோடு, படத்தின் நாயகன் சோனு சூட் நடித்த காட்சிகளையும் நீக்கியதால், சோனு சூட் படத்திலிருந்து விலகியிருப்பதுதான் பாலிவுட்டில் பரபரப்பான தகவலாகும். ஆனால் கங்கனா தரப்பில் இத்தகவல்கள் மறுக்கப்பட்டுள்ளது.

ஷகிலாவாக  நடிக்கும் ரிச்சா சட்டா!

Story image

""மலையாள நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை  "ஷகிலா'  என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கும் இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், உண்மை சம்பவங்களை இணைத்து உருவாக்கிய  திரைக்கதையை  கேட்டபோது கதையமைப்பு  என்னை மிகவும் கவர்ந்தது.  இதுபோன்ற படங்கள் சமூக பொறுப்புகளை வளர்க்கக் கூடியதாகும். இதில் நடிப்பதற்கு முன் ஷகிலாவை இருமுறை நேரில் சந்தித்தேன். ஒரு நடிகையின் வாழ்க்கை நடிப்பதோடு நின்று விடுவதில்லை. ஷகிலா இப்போது சுதந்திரமானவராகவும் ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவராகவும் இருக்கிறார். அவரது பாத்திரத்தை ஏற்று நடிப்பது  ஒரு சவாலான விஷயமாகும்'' என்கிறார் நடிகை ரிச்சா சட்டா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.