இதுபுதுசு
காணாமற்போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்க, ஆள் கடத்தும் கும்பலுடன் மோதும் பெண் போலீஸ் அதிகாரி ஷிவானியாக, 2014-ஆம் ஆண்டு வெளியான "மர்தானி' படத்தில் நடித்தார் ராணி முகர்ஜி.


போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி!
காணாமற்போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்க, ஆள் கடத்தும் கும்பலுடன் மோதும் பெண் போலீஸ் அதிகாரி ஷிவானியாக, 2014-ஆம் ஆண்டு வெளியான "மர்தானி' படத்தில் நடித்தார் ராணி முகர்ஜி. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் "மர்தானி -2' படத்திலும் அதே போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ""மர்தானி' வெளியானது முதல் அதன் தொடர்ச்சியிலும் நானே நடிக்க வேண்டும் என பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஏற்கெனவே அந்த கதை என் மனதைவிட்டு அகலாத நிலையில் அதன் தொடர்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் ராணி முகர்ஜி.
மறுபிறவி எடுத்தாலும் இந்த வாழ்க்கைத்தான் வேண்டும்!
அண்மையில் தன் கணவர் திலிப் குமாரின் 96-ஆவது பிறந்தநாளின்போது அவரது மனைவி சயிராபாணு கூறியதாவது, ""இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை நாங்கள் கொண்டாடவில்லை. அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்படி அவரது நண்பர்கள் பிரார்த்தனை செய்ததே போதும். ஒவ்வொரு நாளும் நான் அவருடன் இருப்பது கடவுள் தந்த பரிசாக கருதுகிறேன். மீண்டும் எனக்கு மறுபிறவி கிடைத்தால் இப்போதுள்ள வாழ்க்கையைத்தான் வேண்டுமென்று கேட்பேன். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நாங்கள் வாழும் வாழ்க்கை இறைவன் கொடுத்தவரம்''.
திரைப்படம் மற்றும் மீடியா பள்ளி இயக்குநர்!
""சிறுவயதில் நான் நடனம் பயிலும்போதும், படங்களில் நடிக்கும் போதும் சந்தித்த தோல்விகள் எனக்கு நல்ல அனுபவங்களை கற்று தந்தன. இன்று எதையும் தனியாக சந்திக்கும் சக்தியை கொடுத்திருக்கிறது. ஆண்களும் பெண்களும் ஒன்றாக பணியாற்றும் இடங்களில் எதிர்காலத்தை எதிர்நோக்கும் இளைஞர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு கல்லூரியின் கடமையாகும்'' என்று கூறும் நடிகை அமலா, தற்போது ஹைதராபாத்தில் உள்ள ப்ளூகிராஸ் நிர்வாக ஸ்தாபகராகவும், இயக்குநராகவும் இருப்பதோடு திரைப்படம் மற்றும் மீடியா பள்ளி இயக்குநராகவும் உள்ளார்.
வேண்டுதலை நிறைவேற்றிய நடிகை!
தனக்கேற்பட்ட புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவுடன், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருவதாக வேண்டிகொண்ட மனீஷா கொய்ராலா, அண்மையில் தன் தாயுடன் சென்று கங்கையில் பூஜை செய்துவிட்டு, கோயிலுக்கும் சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். அத்துடன் சிறுவயதில் வாரணாசியில் சில காலம் தங்கியிருந்தபோது, தான் படித்த கன்யாமகா வித்யாலயா பள்ளிக்கும் சென்று, பழைய சிநேகிதிகளையும், தற்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார்.
இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்!
மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார், கடந்த ஆண்டில் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட பிரபலமான நபர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். "ஒரு ஆதார் லவ்' என்ற படத்தில் "மாணிக்ய மலரய பூவி...' என்ற பாடலில் பிரியா கண் சிமிட்டியது வழக்கு போடுமளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ""நான் நடித்த படம் பிப்ரவரி மாதம்தான் ரிலீஸ் ஆகிறது. அதற்குள் எனக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது நல்ல நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், கூடவே பயத்தையும் ஏற்படுத்தியது'' என்று பிரியா கூறியிருக்கிறார்.
மீண்டும் களமிறங்க தயாராகிறார் சானியா
குழந்தை பிறந்ததும் உடல் எடையில் 10 கிலோ குறைந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா (32) , 2019 -ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இன்னும் உடல் எடையை குறைப்பதற்கான, உணவு கட்டுப்பாட்டை தொடங்கியுள்ளார். தன் பிரசவத்தைப் பற்றி சானியா என்ன கூறுகிறார், ""கர்ப்பம் தரிப்பது சுலபம். பிரசவிப்பதுதான் சிரமம். பிரசவ சமயத்தில் அவசரப்பட்டு சிசேரியன் முறையில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாமல் சுகப்பிரசவத்திற்காக நான் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. விளையாட்டு வீராங்கனை என்பதால் இயற்கையான சுபாவத்தை மாற்ற இயலாது. எதிர்த்து நின்று அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ஒரு தீர்வை காண வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...