நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீபாவளி டிப்ஸ்

நெய் வைத்திருக்கும் ஜாடியில், ஒரு துண்டு வெல்லத்தைப் போட்டு வைத்திருந்தால், நெய் மணம் மாறாமல் இருக்கும்.

News image
Updated On :23 அக்டோபர் 2019, 8:00 am

ஜோ ஜெயக்குமார்

நெய் வைத்திருக்கும் ஜாடியில், ஒரு துண்டு வெல்லத்தைப் போட்டு வைத்திருந்தால், நெய் மணம் மாறாமல் இருக்கும்.

பக்கோடா மொர மொரப்பாக இருக்க, மாவைக் கலக்கும்போது, சிறிதளவு நெய்யும், உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
உளுந்த வடைக்கு, மாவை நைசாக அரைத்து, வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து, பிசைந்து வடை தட்டினால் வடை வெகு ஜோராக இருக்கும்.

ரவா லட்டு செய்யும் போது, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டைப் பிடியுங்கள். உருண்டையும் சுலபமாக இருக் கும். வாசனையாகவும் இருக்கும்.
அதிரசம், கடிப்பதற்கு மிருதுவாக இல்லாமல், கரடு முரடாக இருக்கிறதா? இட்லி குக்கரில் வைத்து, அவிய விட்டு எடுங்கள்.

முறுக்கு, காராபூந்தி, பிஸ்கட் வைக்கும் டின்களில், சிறிதளவு உப்பை, ஒரு துணியில் முடிந்துப் போட்டு வைக்கவும். நமத்துப் போகாமல், மொறு மொறுவென்று இருக்கும்.

தேன்குழல் செய்ய  மாவு அரைக்கும் போது, உருளைக்கிழங்கை வேகவைத்து, அதனுடன் சேர்த்து அரைத்தால், தேன்குழல், மிக மிக சுவையாக இருக்கும்.
அதிரசம் செய்யும் போது, சிறிது பேரிச்சம் பழம் கலந்து மாவைப் பிசையுங்கள் சுவை ஜோராக இருக்கும்.

தேன் குழல், சீடை  ஆகியவற்றுக்கான மாவுடன், வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால், எத்தனை நாட்களானாலும், நமத்துப் போகாது.

மைசூர் பாகு செய்யும் போது, ஒரு பங்கு கடலைமாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு கலந்து செய்தால் வாயில் போட்ட வுடன் கரைந்து விடும்.

குலோப்ஜாமூன் செய்யும் போது, மாவில் சிறிது வெண்ணெய் சேர்த்தால், மிருதுவாக இருக்கும். பொரித்தெடுத்த ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பாகில் சேர்க்காமல், நன்கு ஆறிய பின் சேர்க்கவும். ஜாமூன்கள் விரியாமல், கரையாமல் சுவையாக இருக்கும்.

டப்பாவில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தை, பேப்பரில் மடித்து வைத்து, மேலே லட்டுகளை வைத்தால், நல்ல வாசனையாக இருக்கும்.

எண்ணெய்ப் பலகாரம் செய்யும் போது, எண்ணெய் பொங்கி வழிந்தால், 
கறிவேப்பிலையையோ, சிறிது புளியையோ போட்டு எடுத்து விட்டுப் பயன்படுத்தினால், எண்ணெய் பொங்காது, காறல் வாசனையையும் தவிர்க்கலாம்.

சமையலறை மேடையில், எண்ணெய் கொட்டிப் பிசுக்காக இருந்தால், கடலை மாவைக் கெட்டியாக, தண்ணீரில் கரைத்துப்  பூசி, சிறிது நேரம் ஊற வைத்துத் தேய்த்து கழுவ மேடை பளிச்சென்று இருக்கும்.

அரைத்த மாவு சற்று சூடாக இருக்கும் பட்சத்தில், காகிதத்தில் கொட்டிப் பரப்பி, சூடு நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் நிரப்பி வைக்கணும்.

ஏலக்காய்ப் பொடித்து போட்ட பிறகு, அதன் தோலை குடிக்கும் நீரில் போட்டு விட்டால், மணமும், ருசியும் சேர்ந்து சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.