கோடைக்கேற்ற சிக்கன்காரி உடைகள்!
கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் என்ன உடை உடுத்தலாம்? எதை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் பெண்களுக்கு ஏற்படுவதுண்டு.


கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் என்ன உடை உடுத்தலாம்? எதை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் பெண்களுக்கு ஏற்படுவதுண்டு. இந்த கோடைக்கு நீங்கள் விரும்பும் டிசைன்களில் தேர்ந்தெடுக்க தகுந்த எடைகுறைவான லேசான லக்னௌ எம்ப்ராய்டரி சேலைகள் மற்றும் குர்தா உடைகள் என தயங்காமல் கூறலாம்.
வழக்கமான பூக்கள் வேலைபாடுகளுடன் கூடிய எம்ப்ராய்டரி சேலைகள் மட்டுமின்றி கோடை வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் வகையில் பார்ட்டி ஆடைகள், திருமண உடைகள், டாப்ஸ், பேண்ட்ஸ் என பலவித டிசைன்களில் பெண்களுக்காகவே வெளிவந்துள்ளன.
எம்ப்ராய்டரி என்பதை குறிக்கும் சொல்லே சிக்கன்காரி. பேச்சு வழக்கில் லக்னௌ சிக்கன் வகைகள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் கோடைக்காலத்தில் உடுத்துவதற்காக உருவான பாரம்பரிய உடைதான் சிக்கன்காரி எம்ப்ராய்டரி சேலைகள். மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா வந்த எகிப்து யாத்ரிகர் மெகஸ்தனீஸ், இந்தியாவில் மெல்லிய மஸ்லின் துணிகளில் எம்ப்ராய்டரி வேலைபாடுகளுடன் கூடிய சிக்கன்காரி சேலைகளை பெண்கள் உடுத்துவது குறித்து தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். முகலாய மன்னர் ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் கூட எம்ப்ராய்டரி செய்வதற்கான முறைகள் குறித்து பயிற்சியளித்ததாக வரலாறு உண்டு. எம்ப்ராய்டரி செய்வதிலும் தைப்சி, பாகியா, பாண்டா, முர்ரி, ஜவி, கீல்கங்கண், ஹூல் என பல வகை ஸ்டிச்சிங் முறைகள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 2-5 லட்சம் எம்ப்ராய்டரி கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கையால் செய்யப்படும் எம்ப்ராய்டரி சேலைகள் வேலைப்பாடுகளின் தரத்திற்கேற்ப ரூ.1200 லிருந்து விலை நிர்ணயிக்கப்படும். மெஷின் எம்ப்ராய்டரி சேலைகளின் விலை ரூ.500 லிருந்து துவங்கும்.
இந்த சேலைகள் மற்றும் உடைகள் முதலிடம் வகிப்பது லக்னௌ நகரமாகும். இச்சேலைகளுக்கு 2008 -ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பருத்தியால் நெய்யப்பட்ட சேலைகளில் மட்டுமின்றி ஆர்கன்சா, ஜார்ஜெட், பட்டு போன்ற துணிகளிலும், இந்திய மற்றும் மேல்நாட்டினர் திருமண உடைகளும் எம்ப்ராய்டரி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் உள்நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் சிக்கன்காரி ஆடைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
ஒரு முழுமையான சேலையை லெஹங்கா எனப்படும் நவீன கலைநயத்துடன் கூடிய எம்ப்ராய்டரி செய்து முடிக்க இரண்டு முதல் நான்கு மாதம் ஆகுமாம். தற்போது பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்ள தயாரிக்கப்படும் வசீகரமான சிக்கன்காரி உடைகள், சேலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுபோன்ற உடைகளை தயாரிக்க 32 வகையான தொழில்நுட்பங்களை கையாள்கிறார்கள். இதில் கைகளால் செய்யப்படும் எம்ப்ராய்டரி சேலைகள், ஆடைகளுக்கு வரவேற்பு அதிகம்.
பிரபலமானவர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது, சிக்கன்காரி எம்ப்ரராய்டரி சேலைகள் மற்றும் ஆடைகளை அணிவதையே கௌரவமாக கருதுகின்றனர். விலை அதிகமென்றாலும், அதற்கேற்ப தரமும், வேலைப்பாடுகளும் உயர்வாக இருக்கும். புவிசார் குறியீடு குறிப்பிட்டுள்ள சேலைகள், ஆடைகளை வாடிக்கையாளர்கள் தேடி பிடித்து வாங்குகிறார்கள். மற்ற சேலைகள் வாங்க செலவிடும் தொகையை விட, சிக்கன்காரி சேலைக்கு வாங்கும் தொகை அதிகமென்றாலும், ஒரு பாரம்பரிய கலையை ஊக்குவிக்க நீங்கள் செலுத்தும் முதலீடாக கருதுங்கள் என்று லக்னௌவில் சிக்கன்காரி சேலைகள், ஆடைகளை வடிவமைக்கும் கலைஞர் அஞ்சல் பண்டாரி கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...