பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கோடையில் கூந்தலை பராமரிக்க...

வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால், தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி வெடிப்பதுடன், செம்பட்டையாகளம் ஆகிவிடும். வெளியில் போகும்போது புழுதிபடுவதால், முடி வறண்டு கொட்டத் தொடங்கும்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால், தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி வெடிப்பதுடன், செம்பட்டையாகளம் ஆகிவிடும். வெளியில் போகும்போது புழுதிபடுவதால், முடி வறண்டு கொட்டத் தொடங்கும். தலையை சுத்தமாக வைத்திருப்பதே இதற்கு நல்ல தீர்ள. வாரம் இருமுறையாவது இந்த முறையில் தலையை அலசி வந்தாலே, எல்லாப் பிரச்னைகளும் சரியாகி விடும்.

செம்பருத்தி இலை - 10, கொட்டை  நீக்கிய புங்கந்தோல் - 3 எடுத்து, இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு நாள் இதைத் தலை முழுவதும் பூசி, நன்றாகத் தேய்த்து அலசுங்கள். புங்கந்தோல், தலையில் உள்ள அழுக்கை நீக்கும். செம்பருத்தி, கூந்தலை மிருதுவாக்கும்.

சீயக்காய் - கால் கிலோ, பயத்தம் பருப்பு - 200 கிராம், பூலான்ங்கிழங்கு - 100 கிராம், சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர் - 10 கிராம். இந்த நான்கையும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு இந்தப் தூளைப் பயன்படுத்துங்கள். இதனால் முடி கொட்டாமல், செழிப்பாக வளரும். வாசனையுடனும் இருக்கும். பேன் தொல்லை இருந்தால் இந்த தூளுடன், துளசியைக் காய வைத்து அரைத்த தூள், சுட்ட வசம்புத்தூள் - தலா 1தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பேனோ, பொடுகோ கிட்டவே நெருங்காது.

இயற்கை கண்டிஷனர் தயாரிக்கும் முறை: மருதாணி பளடர் - 1 தேக்கரண்டி, வெந்தயப் பளடர், அரைத்த டீத்தூள், நெல்லிக்காய் தூள்- தலா 1தேக்கரண்டி, தயிர் - 2 தேக்கரண்டி எல்லாவற்றையும் கலந்து, இத்துடன் 3 தேக்கரண்டி  நல்லெண்ணெய் சேர்த்து, வெந்நீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அலசளம். 

மருதாணி, தலையை குளிர்ச்சியாக்கும். வெந்தயம், முடி வெடிப்பையும் நுனி பிளவையும் போக்கும். நெல்லிக்காய், முடி கொட்டுவதை நிறுத்தும். நல்லெண்ணெய், செம்பட்டையான முடியை கறுமையாக்கும். தயிரும் டீத்தூளும் கூந்தலை மிருதுவாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.