தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அமெரிக்கர்கள் கொண்டாடும் இந்திய மருத்துவர்..!

கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து  எல்லா நாடுகளும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில்  நேரடியாகப்  போராடும் போராளிகள் டாக்டர்களும் செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும்தான்.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 2:56 pm


கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து எல்லா நாடுகளும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் நேரடியாகப் போராடும் போராளிகள் டாக்டர்களும் செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும்தான். இந்தியாவில், வாடகைக்கு வசிக்கும் சில டாக்டர்கள், செவிலியர்களை வீட்டைக் காலி செய்யுங்கள் என்று நிர்பந்திக்கிறார்கள்.

பாதுகாப்பு உடை, சோதனைக் கருவிகள், முகக்கவசம், கையுறைகள் போதிய அளவு இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து போராடும் டாக்டர்கள் செவிலியர்களை கை கூப்பிக் கும்பிடும் பெரும்பாலோர் இருக்கும் நிலையில், கரோனாவுக்கு எதிரான மருத்துவப் போரில் உயிரைப் பறி கொடுத்த இரண்டு டாக்டர்களின் உடலை எரியூட்ட, அடக்கம் செய்ய முற்பட்டபோது சென்னையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தது உலக நாடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவைச் சிலிர்க்க வைக்கும் செய்தி நியூயார்க் நகரத்திலிருந்து வந்துள்ளது.

வல்லரசான அமெரிக்காவில் கரோனா தொற்று தீயாகப் பரவி பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எட்டரை லட்சத்தைத் தாண்டிவிட்டது. தினமும் சுமார் இரண்டாயிரம் அமெரிக்கர்கள் கரோனா பாதிப்பால் இறந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கனெக்டிகெட் மாநிலத்தில் சவுத் வின்ட்ஸர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கு பணிபுரியும் பல டாக்டர்கள் தயங்கிப் பின்வாங்கிய சூழ்நிலையில் அங்கு பணிபுரியும் இந்தியரான மருத்துவர் உமாராணி மதுசூதனா சிகிச்சை அளிக்க முன்வந்து இரவு பகலாகப் பணி புரிந்து வருகிறார்.

உமாராணியின் புனிதமான மருத்துவ பணியை கெளரவிக்கும் விதமாக அந்த நகர பொதுமக்கள், நோயாளிகளின் உறவினர்கள், காவல்துறை மற்றும், தீயணைப்புத்துறையினர் என சுமார் 147 வாகனங்களில் ஊர்வலமாக வந்து உமாராணியின் வீட்டிற்கு முன் ஹார்ன்களை முழக்கி.. வாகனங்களின் விளக்குகளை எரியவிட்டு, வாகனங்களில் அமர்ந்தபடியே கைகளை உற்சாகத்துடன் அசைத்து நன்றி, மரியாதைகளைத் தெரிவித்தனர். வாகனங்களில் உமாராணிக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்ட வாசக அட்டைகளையும் தொங்கவிட்டிருந்தனர்.

உமா ராணியும் வீட்டிற்கு வெளியே வந்து புல்வெளியில் நின்று பதிலுக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார். இந்த காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆறரை நிமிட காணொளி காட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வண்டிகள் ஊர்வலமாக வந்து கொண்டே இருக்கின்றன. மருத்துவர் உமாராணி மைசூரைச் சேர்ந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.