மின்னல்கள்!
மஹாலட்சுமி கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருபவர்.


கரோனாவிற்கு முன்பு சின்னத்திரை வட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான விஷயமாகப் பேசப்பட்டு வந்தது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "தேவதையை கண்டேன்' தொடரில் வில்லியாக நடித்து வந்த மகாலட்சுமிக்கும், அதில் நாயகனாக நடித்து வந்த ஈஸ்வருக்கும் இடையிலான காதல் விவகாரம்தான்.
மஹாலட்சுமி கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருபவர். இறுதியாக , சன் டிவியில் "தாமரை' மற்றும் "வாணி ராணி' தொடரிலும் நடித்து முடித்திருந்த நிலையில், ஜீ தமிழ் சேனலில் "தேவதையைக் கண்டேன்' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, ஈஸ்வருக்கும், அவரது மனைவி ஜெய்ஸ்ரீக்கும் பிரச்னை முற்றி விவாகரத்து வரை சென்றனர். அதே போல மஹாலட்சுமியும் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டது வந்தது. இந்நிலையில்தான் கரோனாவினால் பொதுமுடக்கம் ஏற்பட்டு தொடர்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது பொதுமுடக்கத் தளர்வுக்கு பின் மீண்டும் தொடர்களின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமியும் வருவார்களா என்று படக்குழுவினர் சந்தேகத்தில் இருந்து வந்த நேரத்தில், இருவருமே படப்பிடிப்பிற்கு வழக்கம்போல சென்றுள்ளார்கள்.
ஆனால், இவர்களது இந்த பிரச்னை ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கி உள்ளதாக படக்குழுவுக்கு தகவல் வர, தேவையில்லாத சர்ச்சைக்குள் சிக்கிய இவர்கள் இருவரையும் நீக்கிவிட வேண்டுமென்று சேனல் தரப்பில் பேசப்பட்டு வருவதாகவும். இதனால் இந்தத் தொடரை, இந்த மாத இறுதியோடு முடித்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் "நாயகி' தொடரும் ஒன்று. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டு, தற்போது பொது முடக்க தளர்வுக்கு பின் மீண்டும் "நாயகி' தொடர் ஒளிபரப்பாகிறது. ஆனால், இத்தொடரில் லீட் ரோலில் நடித்து வந்த நாயகன், நாயகி இருவருமே மாற்றப்பட்டு, தற்போது, கிருஷ்ணாவும்-நட்சத்திராவும் புதிய கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்பு நாயகியாக நடித்து வந்த வித்யா பிரதீப், கரோனா பயம் காரணமாகவே தொடரில் இருந்து விலகியதாக வதந்திகள் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான வித்யா தனது இன்ஸ்டாகிராமில், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ""கரோனா பயம் காரணமாக நான் தொடரை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுவது பொய்யான தகவல். மேலும், தொடரை விட்டு நான் வெளியேறவில்லை.
தொடரில் எனக்கான டிராக் முடிந்துவிட்டதாகவும், புதிய டிராக் தொடங்கப்போவதாகவும் தொடர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுத்திருந்தனர். எனவேதான் நாங்கள் வெளியேறியுள்ளோம். மற்றபடி ஒரு புரொஜக்ட் பாதியில் இருக்கும்போது அதிலிருந்து வெளியேறும் பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை'' எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...