சமையல் சமையல்!

வாழைப்பழத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு இட்லிமாவு பதத்திற்குக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
சமையல் சமையல்!
Updated on
2 min read

வாழைப்பழ பக்கோடா


தேவையானவை:
வாழைப்பழம் - 2
கடலை மாவு - 100 கிராம்
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை: வாழைப்பழத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு இட்லிமாவு பதத்திற்குக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தைத் தோலுரித்து அரை அங்குல கனத்திற்கு வட்டமான துண்டுகளாக வெட்டி கரைத்த மாவில் தோய்த்து எடுத்து அடுப்பில் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.


வெந்தயக்கீரை பக்கோடா


தேவையானவை:
வெந்தயக்கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 100 கிராம்
கடலைமாவு - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தயிர் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
தனியா - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 சிறிய துண்டு
பெருங்காயம் - 1தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை: வெந்தயக் கீரையைக் காம்புகளை நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நான்கு தேக்கரண்டி எண்ணெய்யோடு மற்ற பொருள்களையெல்லாம் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, கீரையையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இட்லிமாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்தவுடன் ஒரு தேக்கரண்டி கலவையை எண்ணெய்யில் விட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும்.


உருளைக்கிழங்கு பக்கோடா


தேவையானவை:
உருளைக்கிழங்கு - 400 கிராம்
பச்சைமிளகாய் - 8
இஞ்சி - 1 சிறிய துண்டு
அரிசி மாவு - 50 கிராம்
தயிர் - 100 கிராம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெந்தயக்கீரை - 1 புடி
உப்பு , எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து நன்றாக மசிக்க வேண்டும். இதோடு மற்ற எல்லாவற்றையும் கலந்து நன்றாக பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கலவையை கையால் உதறி உதறி போட்டு மிதமான நெருப்பில் பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.


பட்டாணி பக்கோடா


தேவையானவை:
பட்டாணி - 200 கிராம்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கடலைமாவு - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 3
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

செய்முறை: முதலில் பட்டாணியை வாணலியில் சிறிது வறுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து நீரை வடித்துக் கொள்ள வேண்டும். கடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக தண்ணீர் விட்டு பிசைய வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து பக்கோடா போடும் பதத்தில் மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிம்மில் வைத்து பட்டாணியை கலவையில் புரட்டி எடுத்து பிசறி போட வேண்டும். பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.


வேர்க்கடலை பக்கோடா


தேவையானவை:
வேர்க்கடலை - 100 கிராம்
கடலைமாவு - 50 கிராம்
அரிசிமாவு - 1 கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை: கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் வெண்ணெய்ச் சேர்த்து நீர்விட்டு இட்லிமாவுப் பதத்தில் கரைக்கவும். வேர்க்கடலையை அதில் முக்கி வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பிசறிவிட்டு வேக வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com