அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதன்முறையாக போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பின பெண் பைலட் தேர்வாகி இருக்கிறார்.
உலகின் மிகச்சிறந்த விமானப் படையை கொண்டுள்ள அமெரிக்காவில், கடந்த 45 ஆண்டுகளுக்குமுன் முதல் முறையாக ரோஸ்மேரி மெரினர் என்ற பெண் பைலட் , போர் விமானத்தை இயக்கத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் , அமெரிக்காவின் முதல் பெண்போர் விமானி என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க கடற்படையில் முதல் முறையாக போர்விமானத்தை இயக்குவதற்கு கருப்பினத்தை சேர்ந்த முதல் பெண் பைலட்டாக ஜே.ஜி. மெடலின் ஸ்விக்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பர்கே என்ற இடத்தை சேர்ந்தவர். அமெரிக்க கடற்படை பயிற்சி மையத்தில் 2017-இல் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர், கடற்படை விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.
கடற்படை போர் விமானங்களை இயக்குவதற்கான முறையான அனுமதி மெடலினுக்கு வழங்கப்பட உள்ளதாக, அமெரிக்க கடற்படை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


