எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மோர்க்குழம்பு ருசியாக  இருக்க...

தக்காளிப்  பழங்களுடன் பூசணிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து  வேகவிட்டு சூப் செய்தால், சூப்  கெட்டியாக  இருப்பதுடன்  சத்தும்  சுவையும் கூடும். 

News image
Updated On :16 டிசம்பர் 2020, 6:00 am IST


தக்காளிப் பழங்களுடன் பூசணிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வேகவிட்டு சூப் செய்தால், சூப் கெட்டியாக இருப்பதுடன் சத்தும் சுவையும் கூடும்.

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்து விட்டு, பின் எண்ணெய்யில் பொரித்தால் நன்கு பொரியும்.

மீந்துப் போன ஜாமில் சிறிது தண்ணீர் விட்டுத் தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள், வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்தால் சுவையான இனிப்புப் பச்சடி தயாரிக்கலாம்.

பூர்ணக் கொழுக்கட்டை செய்யும்போது, வெடிக்காமலும் விரியாமலும் இருக்க, அரிசியுடன் உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைக்கவேண்டும்.

Story image

கனிந்த பப்பாளிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது பசும்பால் சேர்த்துக் கொதிக்க விடவும். கெட்டியானவுடன் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்துக் கிளறி எடுத்தால் பப்பாளிப் பழ ஜாம் ரெடி. பிரெட், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

வெந்தயம், மிளகு, சீரகம், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, தனியா, மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தேவைக்கேற்ப எடுத்து தேங்காய்ச் சேர்த்து நைசாக அரைத்து மோரில் கலந்து கொள்ளவும். அவற்றை மோர்க்குழம்பு வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து இறக்கினால் புது ருசியுடன் சுவையான மோர்க்குழம்பு தயார்.

தயிர்ப்பச்சடி நீர்த்துப் போகாமல் இருக்க இரண்டு தேக்கரண்டி பொட்டுக்கடலைப் பொடியைச் சேர்த்துக் கலந்தால் நீர்க்காமல் தயிர் பச்சடியின் சுவையும் சூப்பராக இருக்கும்.

இடியாப்பத்திற்கு மாவுப் பிசையும்போது அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்தால் இடியாப்பம் மென்மையாக இருக்கும்.

Story image

முருங்கைக்காயை அவியல், கூட்டு, சாம்பாரில் துண்டுகளாக நறுக்கிப் போடுவதற்கு பதிலாக அதன் சதைப்பகுதியை மட்டும் சேர்த்துச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது தொட்டுக்கொள்ள சோளமாவு பயன்படுத்தினால் சப்பாத்தி நன்றாக வரும், மாவும் கொஞ்சமாகத்தான் செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.