
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் பயன்மிக்கது என்பதால் பனை மரத்தை "கற்பக விருட்சம்' என்று அழைப்பர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
பனங்கிழங்கு குளிர்ச்சியினை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து எடுத்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் போன்று செய்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
பனங்கிழங்கினை வேகவைத்து சிறுசிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டியினை சேர்த்து இடித்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிடும் போது உடல் உறுப்புகள் பலம் பெறும். கர்ப்பப்பை பலம் பெறும்.
பனங்கிழங்கு வாயு தொல்லை உடையதால், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இதனை தவிர்க்கலாம்.
பனங்கிழங்கில் நார்சத்து உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.
பனங்கிழங்கினை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து உண்டால் பசி தீரும். நோய்களும் கட்டுப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.