கடந்த 2013 -ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும்பாலான இல்லத்தரசிகளின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நிறைவுற்ற தொடர் "வாணி ராணி'. இதில் ராதிகா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த தொடரில் ராணியின் கடைக்குட்டி மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் தேனு கதாபாத்திரத்தில் நடித்த நேஹா.
கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது கேரளாவாக இருந்தலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தந்தையின் மூலம் தான் சீரியலில் நுழைந்தார். தமிழில் "பைரவி' என்ற சீரியலில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் "பிள்ளை நிலா', "வாணி ராணி' போன்ற தொடர்களில் நடித்தார். இதைத்தவிர "தி எல்லோ பெஸ்டிவல்' என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். தற்போது தொடர்கள் மட்டுமல்லாது அவ்வபோது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் சன் குடும்ப விருதுகள் விழாவில் கலந்து கொண்டார். இளம் நடிகையை போல உருமாறி வளர்ந்திருந்த தேனுவை கண்டதும், அனைவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேனுவா இது, என வியந்து போயிருக்கிறார்கள் மேலும், நேஹா விரைவில் ஒளிபரப்பாகவுள்ள "சித்தி - 2' தொடரில் நடிக்கவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

