சின்னத்திரை மின்னல்கள்!: தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி!

கலர்ஸ்  தொலைக்காட்சியில்  இரவு  7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "மலர்'. நூறு எபிசோட்களை கடந்து விட்ட  இத்தொடரில்  மலர் கதாபாத்திரத்தில்  நாயகியாக நடித்து வருபவர் நயனா  ஷெட்டி.
சின்னத்திரை மின்னல்கள்!: தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி!

கலர்ஸ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "மலர்'. நூறு எபிசோட்களை கடந்து விட்ட இத்தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருபவர் நயனா ஷெட்டி. இத்தொடர் குறித்து நயனா பகிர்ந்து கொண்டவை:

தமிழ் சின்னத்திரையில் வாய்ப்பு பெற்றது குறித்து?

ஷிவமோகா தீர்த்தஹல்லிதான் நான் பிறந்த ஊர். பள்ளி, கல்லூரி எல்லாம் பெங்களூருவில். "பஞ்சரங்கி பூம் பூம்' என்ற கன்னடத் தொடர் மூலம்தான் எனது சின்னத்திரை வாழ்க்கைத் தொடங்கியது. கன்னட சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த போதுதான், எனது நண்பர் மூலமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் "மலர்' தொடருக்கான வாய்ப்பு வந்தது. முயற்சி செய்து பார்க்கலாமே என்று ஆடிஷனில் கலந்து கொண்டேன். சில நாட்களின் காத்திருப்பிற்குப் பிறகு அழைப்பு வந்தது. இப்போது 100 எபிசோட்களை கடந்து மலராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தமிழில் பணிபுரியும் அனுபவம் பற்றி?

தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாகவே இருந்து வந்தது. இப்போது அந்த கனவு நிறைவேறியிருக்கு. மலராக தமிழ் மக்கள் என்னை ஏத்துக்கிட்டதில் சந்தோஷம். அதே சமயம் விமர்சனங்களும் வந்திருக்கிறது. எனவே, இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி அதை மாற்ற உழைப்பேன்.

"மொழிப் பிரச்னையை எப்படி சமாளிக்கிறீங்க?' என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால், மொழி எனக்கு எப்பவும் தடையாக இருந்ததில்லை. என்னைப் பொருத்தவரை, ஒரு விஷயத்தில் நாம் என்ன உணர்ந்து கொள்கிறோமோ அதை வெளிப்படுத்த பயன்படும் கருவிதான் மொழி. முன்பே தமிழ் எனக்கு ஓரளவு புரியும். இப்போது பேசுவதற்கும் கற்று வருகிறேன். விரைவில் பேசுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த்திரைப் படங்கள் பார்ப்பதுண்டு. விஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும். அவரின் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். அவரோடு ஒருபடமாவது இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com