நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகப்பேறு  மருத்துவரின் திரையுலக பயணம்!

கன்னடத் திரையுலகில் பிரபலமான அழகி ஸ்ரீ லீலாவின் அம்மா ஸ்வர்ணலதா, பிரபலமான மகப்பேறு மருத்துவராக மட்டுமின்றி செயற்கை கருத்தரிப்பு மருத்துவத்திலும் தேர்ச்சிப் பெற்றவராவர்.

News image
Updated On :15 ஜூலை 2020, 12:30 am

பூா்ணிமா

கன்னடத் திரையுலகில் பிரபலமான அழகி ஸ்ரீ லீலாவின் அம்மா ஸ்வர்ணலதா, பிரபலமான மகப்பேறு மருத்துவராக மட்டுமின்றி செயற்கை கருத்தரிப்பு மருத்துவத்திலும் தேர்ச்சிப் பெற்றவராவர்.

கன்னடத் திரையுலகில் பெரும்பாலானோருக்கு மருத்துவ ஆலோசகராகவும் விளங்கும் இவர், அனைத்து வயது பெண்களுக்கும் பயன்தரும் வகையில் மாதவிடாய் தொடங்கி ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் உடல் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் முழுமையான தகவல்களுடன் புத்தகமொன்றையும் எழுதியுள்ளார்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஸ்வர்ணலதா (51) சினிமாத் துறையில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் தொடர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் அயர்வு, மன அழுத்தம், எடை கூடுவது, குறைவது போன்றவைகளுடன், கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் பிரச்னைகள், கருதரிப்பு தாமதமாவது, செயற்கை கருத்தரிப்பு முறை என பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்வதோடு சிகிச்சையும் அளிக்கிறார்.

தன்னிடம் சிகிச்சை பெற வருபவர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்வதோடு, தன்னுடைய நேரடி பார்வையிலேயே சிகிச்சை அளிக்கிறார். இதனால் கன்னடத் திரையுலக பிரபலங்களும் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இவர் மருத்துவத்தில் மட்டுமின்றி நடனத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பதால் மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இவரது மகள் ஸ்ரீலீலாவுக்கு திரையுலக சிநேகிதர்கள் பலர் இருப்பதால் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கல்விதான் முக்கியம் என்பதால், தற்போது மருத்துவத்தில் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலீலாவுக்கு, படிப்பு முடியும் வரை சினிமாவில் நடிப்பதற்கு தடை விதித்துள்ளார். ஆனால் ஸ்வர்ணலதாவுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

""நம் குடும்பத்தில் படிப்பை முடித்ததும் நான்தான் சினிமாத்துறைக்குச் செல்வேன் என்று நினைத்தேன். ஆனால் அந்த பெருமையை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் போலிருக்கிறதே'' என்று ஸ்ரீலீலா என்னை கேலி செய்கிறாள். "விரைவில் என்னை அம்மா வேடங்களில் பார்த்தால் ஆச்சரியப்படாதீர்கள்' என்கிறார் ஸ்வர்ணலதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.