சின்னத்திரை மின்னல்கள்!: அழகோ, நிறமோ வெற்றியை தீர்மானிப்பதில்லை!
விஜய் தொலைக்காட்சியின் "பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருப்பவர் ரோஷ்னி ஹரிபிரியன்.


விஜய் தொலைக்காட்சியின் "பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருப்பவர் ரோஷ்னி ஹரிபிரியன். தனது சின்னத்திரை என்ட்ரி குறித்து பகிர்ந்து கொண்டவை:
""கல்லூரி முடித்துவிட்டு, ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கை நிறைய சம்பளம் கிடைத்தாலும் எதையோ மிஸ் செய்வது போன்ற உணர்வு இருந்துக் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில்தான், மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மாடலிங் செய்ய தொடங்கினேன்.
ஒரு நாள் என் நண்பர் ஒருவர் விஜய் டிவியில் புதிய தொடர் ஒன்று தொடங்கவுள்ளதாகவும் அதன் நாயகி கதாபாத்திரத்திற்கு மாநிறமான பெண் தேவைப்படுகிறது நீ செய்றீயா என்றும் கேட்டார்.
மாடலிங்கில் ஓரளவு அனுபவம் இருக்கிறது. ஆனால் நடிப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாதே என தயங்கினேன். இருந்தாலும் தொடரின் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, ரொம்ப பிடித்திருந்தது. சரி முயற்சி செய்துதான் பார்க்கலாமே என்றுதான் கதைக்குள் வந்தேன்.
இந்த கண்ணம்மா கதாபாத்திரத்திற்கும், என் நிஜ கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. கண்ணம்மா போல ஒருவருடைய நிறத்தையோ, வெளி தோற்றத்தையோ கண்டு நான் எப்பவுமே பழக மாட்டேன். எந்த கஷ்டம் வந்தாலும் எப்பவும் வெள்ளந்தியான ஒரு புன்னகை என் முகத்தில் இருக்கும். இதனால், என்னோட நண்பர்கள், என் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருமே என்னை இப்போ கண்ணம்மா என்றே கூப்பிடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நான் மாடலிங் துறையில் இருந்தபோது, மாநிற தோற்றம் கொண்ட பெண்களுக்கு மாடலிங், ஃபேஷன் துறைகளில் வாய்ப்புகள் இருக்கிறதா என நிறையபேர் கேட்டிருக்கிறார்கள்.
மாடலிங் துறையைப் பொருத்தவரை, மாநிறத்தை டஸ்கி ஸ்கின் என்று சொல்லுவார்கள். இந்தச் சரும நிறம் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. என்னோட இந்த நிறத்தை வைத்துதான் எனக்கு வாய்ப்பே வந்தது. அப்போதான் மாடலிங்கிற்கு நிறம் ஒரு பொருட்டல்ல என தெரிந்து கொண்டேன். அதுபோன்று, ஒருவருடைய அழகோ, நிறமோ வெற்றியை தீர்மானிப்பதில்லை. அதைத் தாண்டி கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், தன்னம்பிக்கையும்தான் நிற்கும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி.
நடிக்க வருவதற்கு முன்பு நான் எந்த கதாபாத்திரத்தையும் அவ்வளவாக கவனித்ததில்லை. நடிப்பு துறைக்குள்ளே வந்தபிறகுதான், என்னச் சுற்றி இருப்பவர்களை, அவர்களது நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் எந்த ஒரு படத்தைப் பார்த்தாலும் அதில் வரும் கதாபாத்திரங்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ப தங்களது முக பாவங்களை எப்படி காட்டியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாக கவனித்து பார்க்கிறேன்.
அடுத்த கட்டமாக பெரியத்திரைக்கு போகும் எண்ணம் இருக்கிறதா என கேட்கிறார்கள். இப்போதுதான் நான் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். என்னை நம்பி கொடுத்த இந்த வாய்ப்பை நல்லபடியாக முடித்துக் கொடுக்க வேண்டும். என் கவனம் முழுக்க இப்போது அதில் தான் இருக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...