கரோனா: இருட்டிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்!
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் - உங்களை அதிகம் தொந்தரவு செய்வது எது? பொதுமுடக்கம் உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதா?


விளக்குகிறார்
மருத்துவர் மீனாட்சி பரமசிவன்
சென்ற வார தொடர்ச்சி...
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் - உங்களை அதிகம் தொந்தரவு செய்வது எது? பொதுமுடக்கம் உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதா?
உங்களைச் சுற்றி 4 சுவர்களும் 1 கூரையும் இருக்கிறதா? மகிழ்ச்சியாக இருங்கள். வீடற்றவர்களாக முன்பு சாலையில் வாழ்ந்தவர்கள் பலர் இப்போது சாலையும் இல்லாமல் நிற்கதியாய் நிற்கின்றார்கள். அவர்கள் எங்கே போவார்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்? நினைத்துப் பாருங்கள். இப்போது நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்று தோன்றும்.
நேரத்தை எப்படிக் கடத்துவது என்று தெரியவில்லையா?
உங்கள் கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எதையாவது சிறப்பாக செய்திருப்பீர்கள், எதிலாவது சிறந்தவராக இருந்திருப்பீர்கள். அதையே உங்கள் வாழ்க்கைப் பாதையாக தொடர விரும்பியிருப்பீர்கள். ஆனால் கால ஓட்டத்தில் வேறு துறையை தேர்ந்தெடுத்திருப்பீர்கள். இப்போது அதைத் தொடங்குங்கள்; விட்ட இடத்திலிருந்து தொடங்குங்கள். அது கல்வி என்றால் கூட கவலைப்பட வேண்டாம், எல்லா வகுப்புகளும் இப்போது ஆன்லைனில் நடக்கின்றன.
உங்கள் உள்ளடக்கிய சிறப்பு குணங்கள் என்று ஏதாவது ஒன்று இருக்கும். இசை, நடனம், வாசிப்பு, எழுதுதல், வரைதல், தையல், சமையல், பேக்கிங், தோட்டக்கலை போன்றவற்றைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இன்றே அதை தொடங்குங்கள். அது உங்கள் மனதைத் தளர்த்தி, உங்களுக்கு மன நிறைவைத் தரும். நீங்கள் சிறப்புடையவர்கள் என்று உங்களுக்கே உங்களை அறிமுகப்படுத்தும்.
அதிக வேலை - உங்கள் மீது திணிக்கப்படுகிறதா?
எல்லாவற்றையும் சிறிது நேரம் நிறுத்துங்கள். உட்கார்ந்து, நிதானமாக, சில ஆழமான சுவாசங்களை எடுத்து விடுங்கள். உங்களுக்குப் பிடித்தமான காபி அல்லது டீயை மெதுவாக ருசித்து தொண்டையினுள் இறக்குங்கள். அதன் சுவையை அனுபவியுங்கள். உங்கள் கோப்பையை முடிக்கும்போது, நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.
இப்போது, ஒரு துண்டு காகிதத்தை எடுத்து எழுதத் தொடங்குங்கள்:
இன்று செய்ய வேண்டியவை:
இந்தப் பட்டியல் இன்றைய அவசர மற்றும் தவிர்க்க முடியாத விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும், மளிகை சாமான்கள், மருந்துகள் வாங்குவது, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது, உங்கள் வாகனத்தில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புவது போன்ற ஒத்திவைக்க முடியாத விஷயங்களை மட்டும் இன்றே செய்யுங்கள்.
நாளை செய்ய வேண்டியவை:
இன்றைய தினத்தின் ஒத்திவைக்கப்பட்ட பட்டியலையும் இணைத்து நாளைக்குள் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலை உருவாக்குங்கள்.
எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை:
பொதுமுடக்கத்தில் அகற்றப்பட்ட பின்னர் மட்டுமே செய்யக்கூடிய விஷயங்கள் இதில் இருக்க வேண்டும், வங்கிக்குச் செல்வது, காப்பீட்டுக் கொள்கைகளை எடுப்பது, முதலீடுகள் செய்வது போன்றவை.
பட்டியல்களை உருவாக்கிய பிறகு, நீங்கள் விரும்பிய அனைத்து வேலைகளையும் செய்ய உங்களுக்கு போதுமான நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? உங்கள் மனம் இப்போது முற்றிலும் நிதானமாகவும் மன அழுத்தமில்லாமலும் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள்.
கரோனா வைரஸ் உங்களை தாக்கும் என்று பயப்படுகிறீர்களா?
நீங்கள் உங்கள் வீட்டிற்குள் மட்டும் இருந்தால் உங்களுக்கு ஆபத்து மிகவும் குறைவு. ஆனால் உங்கள் வீட்டில் பணிபுரியும் பணிப் பெண்கள், ஓட்டுநர்கள், குழந்தை காப்பாளர்கள், பால், மற்றும் காய்கனி விற்பனையாளர்கள் போன்றவர்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
அவர்கள் இல்லாமல் உங்கள் குடும்பத்தை இயக்க முடியாதநிலை என்றால் பணியாளர்கள் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு கைகளையும் கால்களையும் சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவச் சொல்லுங்கள், வேலை செய்யும்போது எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்துங்கள். அவர்களுக்கு சரியான முகமூடியைக் கொடுங்கள். காரில் உங்கள் டிரைவருடன் சவாரி செய்யும் போது ஏசியை அணைத்துவிட்டு ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வது உங்களுக்கும், உங்களிடம் வேலை பார்ப்பவருக்கும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கிருமி பரவலைத் தடுக்கும்.
நீங்கள் வீட்டிற்குள் இல்லாமல் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கவசம் அணிந்த முகம் மற்றும் கையுறைகள் கட்டாயம். மேலும் மிக முக்கியமாக உங்கள் அடையாள அட்டை மற்றும் உங்கள் அலுவலகத்திலிருந்து பெற்ற அனுமதி கடிதம் ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்லுங்கள். தளர்வான பொது முடக்க காலத்தின் போது முடிந்தவரை உங்கள் சொந்த வாகனத்தில் (2 வீலர் அல்லது 4 வீலர்) உங்கள் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மதிய உணவை வீட்டிலிருந்தே எடுத்துச் சென்று வீட்டிலிருந்து கொண்டு வந்த கரண்டியால் சாப்பிடுங்கள். சிற்றுண்டிச்சாலை (ஸ்ரீஹச்ங்ற்ஹழ்ண்ஹ) அல்லது சாப்பாட்டு விடுதியில் (ஸ்ரீஹய்ற்ங்ங்ய்) அமர்ந்து பலருடன் இருப்பதை விட உங்கள் காபி அல்லது மதிய உணவை உங்கள் கேபினிலேயே அருந்த முயற்சிக்கவும். இப்படி செய்வதினால் அதிக கூட்டத்தை சந்திப்பதையும், அக்கூட்டத்தில் முகக்கவசத்தை எடுத்துவிட்டு உணவருந்துவதையும் தவிர்க்க முடியும்.
எல்லோரிடமிருந்தும் சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். பொதுவான மேற்பரப்புகளைத் தொடுவதை தவிர்க்கவும். நீங்கள் தொட்டால், உங்கள் கைகளை அல்லது கையுறைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். பேசும் போது உங்கள் முககவசத்தை நீங்களோ இல்லை உங்களிடம் பேசுபவரோ அகற்ற வேண்டாம். அறியாமல் அவ்வாறு செய்பவர்களுக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள். எப்போதும் கையில் ஒரு கூடுதல் முகக் கவசத்தை வைத்திருங்கள். தும்மல், இருமல் அல்லது பேசுவதன் மூலம் எச்சில்பட்டு ஈரமாகி விட்டது என்றால் முகக்கவசத்தை மாற்றிவிடுங்கள். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் எப்போதும் உங்கள் துணிகளை நீங்களே துவைத்து, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். இந்த நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் கரோனாவைப் பற்றி பயப்படத் தேவையில்லை.
நீங்கள் கரோனாவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்களா?
தனியார் அல்லது அரசு மருத்துவமனை எதுவாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களுடன் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தின் நலனுக்காக நீங்கள் தனியாக தங்குகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உங்கள் சொந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராக பாவியுங்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் அவர்கள் உங்கள் உயிரைக்காக்க போராடுகிறார்கள் என்பதை மறவாதீர்கள். நீங்கள் தனிமையாக உணரும் போதெல்லாம் அவர்களுடன் பேசுங்கள். அவர்களின் ஆலோசனையின்படி உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது உலகம் முழுவதும் மொபைல் வடிவத்தில் உங்கள் கையில் உள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அரட்டையடிக்கவும். வீடியோ அழைப்பில் அவர்களை பார்க்கவும். ஆனால் எல்லோரிடமும் நீண்ட நேரம் பேசுவதன் மூலம் அதிக சிரமப்பட வேண்டாம், இது உங்கள் தொண்டை மற்றும் நுரையீரலைக் பாதிக்கக் கூடும். அரட்டை அல்லது இன்டர்நெட் பிரெüசிங் செய்வதற்காக இரவு வரை விழித்திருக்க வேண்டாம்.
பகவான் ராமர் தனது குடும்பத்தையும் நாட்டையும் விட்டுவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தார். நீங்கள் வெறும் 14 நாட்கள் மட்டும் தானே மருத்துவமனையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்? இதை எளிதில் சமாளிக்க முடியும் என்று நம்புங்கள்.
(அடுத்த இதழில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...