அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பழையப் பாடல்களின் காதலி!

பழைய நடிகைகளான சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, பத்மினி, வைஜெயந்தி மாலா  போன்றோரை தனது நடை, உடை, முகபாவனை மூலம், அச்சு அசலாக நடித்துக் காட்டுகிறார். 

News image
Updated On :10 ஜூன் 2020, 4:50 pm

ரிஷி

பழைய நடிகைகளான சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, பத்மினி, வைஜெயந்தி மாலா  போன்றோரை தனது நடை, உடை, முகபாவனை மூலம், அச்சு அசலாக நடித்துக் காட்டுகிறார். சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான லலிதாம்பிகை. இவர் ஒரு டிக்டாக் பிரியர். இவரை அறியாத டிக்டாக் பாலோயர்களே இருக்க முடியாது என்றளவுக்கு இவரது டிக்டாக்குகள் பிரபலம். அந்தவகையில் சமீபத்தில் இவர், "பராசக்தி' படத்தில் வரும்  "ஓ ரசிக்கும் சீமானே' என்ற பாடலை, கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி பாடி நடித்து வெளியிட்ட டிக்டாக் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இது குறித்து அவர் கூறியதாவது:

""நான் டிக்டாக் பண்ணத் தொடங்கியபோது துவக்கத்தில் எல்லோரையும் போல் சின்னச் சின்ன வீடியோவாகத்தான் போட்டு வந்தேன். அப்போது எல்லோரையும் போல் இல்லாமல், புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.  அப்போதுதான், பழைய பாடல்களுக்கு, அதில் வரும் நடிகைகளைப் போன்று அலங்காரம் செய்து கொண்டு நடித்து பதிவேற்று என என் அம்மாதான் ஐடியா கொடுத்தார்.  சின்ன வயதிலிருந்தே  அம்மாவுடன் பழைய படங்களையும்,  பாடல்களையும் பார்த்தும், கேட்டும் வளர்ந்ததால் எனக்கும் பழையப் பாடல்கள் பிடிக்கும். சரி செய்துதான் பார்ப்போமே என்று தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.

சின்ன வயதிலிருந்தே எந்தவொரு  கதையைக் கேட்டாலும்  அப்படியே அதற்குள் ஒன்றிவிடுவேன்.  இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கதையில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நினைத்துக்கொள்வேன். 

பாடல்களை அம்மாதான் தேர்ந்தெடுத்துத் தருவார். என் பாட்டி அந்தப் பாடலுக்கானப் பின்னணியை  எனக்கு கதையாக  விளக்குவார். அவர் சொல்லும் விஷயங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.  மேலும், அந்தப் பாடலில் நடிகைகள் ஒவ்வொரு அசைவையும் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும்  வீடியோவில் பார்த்து மனதிற்குள் ஓடவிடுவேன். உதாரணமாக, சரோஜா தேவி என்றால் குழந்தைத்தனம் இருக்கும், பானுமதி என்றால் நடிப்பில் மிடுக்குத் தெரியும். வைஜெயந்தி மாலா என்றால் ஒரு ஸ்டைல் இருக்கும்.  இதையெல்லாம் மனதில் பதிய வைத்துக் கொள்வதால் நடிக்கும்போது என் முகத்தில் இயல்பாய் அந்த பாவனைகள் வந்துவிடுகிறது.  மேலும், சின்ன வயது முதல் பரதநாட்டியம்  கற்று வருகிறேன். தற்போது பி.ஏ. கிளாசிக்கல் டான்ஸ் மற்றும் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இதுதான் முகத்தில் எக்ஸ்பிரஷன் கொண்டு வர சுலபமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 

"பழைய பாடல்களில் நடிகைகள் பயன்படுத்தியது  போன்ற அதே ஆடைகள், அணிகலன்கள் எங்கு கிடைக்கிறது' என்று ரசிகர் கேட்கிறார்கள்.  இந்த அணிகலன்கள், உடைகள் எல்லாம் பெரும்பாலும் இப்போது வாங்கியதில்லை. அந்தக் காலம்தொட்டே  பழைய நடிகைகள் அணிந்திருப்பது மாதிரியான அணிகலன்களை எங்குப் பார்த்தாலும், வாங்கிக் வந்து சேர்த்து வைப்பது அம்மாவுக்கு ஒரு ஹாபி.  அப்படி  அவர் சேர்த்து வைத்த காஸ்ட்யூம்களைத்தான் நான் இப்போது பயன்படுத்திக் கொள்கிறேன். இதற்கென்று தனியாக எந்த மெனக்கெடலும் இல்லை. 

பொதுவாக, டிக்டாக் செய்து பதிவேற்றுவதை  எந்த வீட்டிலும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் நாம் எதை செய்தாலும், அதை சரியான முறையில் செய்யும்போது, வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை  புரிந்து கொண்டேன்.

இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றியுள்ளேன். தற்போது எனக்கு ஒன்றரை லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். இரண்டு மில்லியன் லைக்குகளை தாண்டிவிட்டேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இதுவரை  எனக்கு ஒரு நெகட்டிவ் கமென்ட் கூட வந்ததில்லை. அதுதான் எனக்கான வெற்றியாக நினைக்கிறேன்''  என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.