நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல் டிப்ஸ்..

தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால்  தயிர் புளிக்காது.

News image
Updated On :10 மார்ச் 2020, 2:28 pm

ஜோ ஜெயக்குமார்

தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

=கீரை பசுமையாக ருசியாக இருக்க சமைக்கும்போது சிறிது எண்ணெய்யை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

=உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும் உருளைக்கிழங்கு நீண்ட நேரம் பிரஷாக இருக்கும்.

=பிஸ்கட்டுகள் நீண்ட நாட்கள் நமத்து போகாமல் ஃபிரஷாக இருக்க பிஸ்கட் வைக்கும் பாட்டில்களில் டிஷ்யூ பேப்பரையும் வைத்துவிட்டால், பிஸ்கட் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக இருக்கும்.

=சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய்ப் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டால் எண்ணெய் பிசுக்கு நீங்கிவிடும்.

=சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை இளம் வெந்நீரில் பிசையவும். சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

=பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக ⏰நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

=கொத்துமல்லி, புதினா துவையல்கள் செய்யும்போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் கூடுதல் சுவை தரும்.

=மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க "பளிச்'சென்று இருக்கும்.

=பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு
துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

=அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலை வேண்டாம். டைல்சை சாதாரணத் -துணியாலோ அல்லது -டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

=கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் ஏற்பட்டால், கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் துர்நாற்றம் போய்விடும்.

* வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.