நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேப்பங்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

சேப்பங்கிழங்கில்  அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்  என்ன என்பதை தெரிந்து கொள்வோம்:

News image
Updated On :7 மே 2020, 4:14 pm

ஜோ ஜெயக்குமார்

சேப்பங்கிழங்கில்  அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்  என்ன என்பதை தெரிந்து கொள்வோம்:

உருளை, சர்க்கரை வள்ளி, மரவள்ளி, சேனை போன்றே சேப்பங்கிழங்கும் ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது. லேசான இனிப்பு சுவை இந்த கிழங்கில் இருப்பது சற்று அலாதியான விஷயம். இதனுடைய அறிவியல் பெயர் Colocasia esculenta என்பதாகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நீர்த்தேக்கம் அதிகம் உள்ள இடங்களில் விளையக்கூடியது சேப்பங்கிழங்கு. கேரள மாநிலம் போன்ற நீர் நிலை பகுதிகளில் அதிகம் விளைந்திருப்பதைக் காண முடியும்.

சேப்பங்கிழங்கை மண்ணிலிருந்து எடுத்த உடன் சமைத்து சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படலாம், எனவே, சேப்பங்கிழங்கை  நன்கு காய வைத்து அல்லது சில நாட்கள் கழித்து சமையலுக்குப் பயன்படுத்துவதால் அரிப்புத்தன்மையை தவிர்க்கலாம். சேப்பங்கிழங்கில் உள்ள அரிப்புத்தன்மையைப் போக்க எலுமிச்சைப்பழம், புளி ஆகியவை சேர்த்துப் பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கில் சராசரியாக 85% மாவுச்சத்து உள்ளது.

சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். கொலஸ்ட்ரால் பிரச்னைக்கும் ரத்த அழுத்தக் கோளாறுகளுக்கும் சேப்பங்கிழங்கை மருந்தாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக் கூடியது. 100 கிராம் சேப்பங்கிழங்கில் 135 கிலோ கலோரிகள், புரதம் 11 கிராம் இருக்கிறது. மேலும் வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸýம் அதிகம் உள்ளது. பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சேப்பங்கிழங்கினை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அரிப்பு, அலர்ஜி போன்ற உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதால் 2 வயதுக்குப் பிறகு சாப்பிட கொடுக்கலாம். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய வல்லமை சேப்பங்கிழங்குக்கு உண்டு.

இலையும் ஸ்பெஷல்தான்: சேப்பங்கிழங்கு இலையிலும் மருத்துவ குணம் அதிகம். வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் தேங்காய்ப்பாலில் சேப்பங்கிழங்கு இலையைச் சேர்த்து வேக வைத்து சூப்பாக பருகுவார்கள். உத்தரகாண்ட் போன்ற வட மாநிலங்களில் இலையை பக்கோடா செய்தும் சாப்பிடுவர். சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்து. சேப்பங்கிழங்கு இலையை சாப்பிடுவதால் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.

பாம்புக்கடி, தேள் கடி மற்றும் உணவு நச்சுத்தன்மை அடைதல் ஆகிய விஷத்தன்மையை முறிக்கும் தன்மையும் உள்ளது. மேலும் வலி நீக்கும் நிவாரணியாகவும், ரத்தக்கசிவு  ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கு இலையில் பி வைட்டமின் இருப்பதால் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.