தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோடையை  சமாளிக்க  எளிய  வழிகள்!

குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும்போது மனிதர்கள் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுவது இயல்பு. வழக்கமாக ஏற்படும் பருவமாறுதல் என்றாலும் உணவு கட்டுப்பாடு, தேகப் பயிற்சி போன்றவைகளை

News image
Updated On :14 மே 2020, 4:55 pm

அ. குமார்


குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும்போது மனிதர்கள் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுவது இயல்பு. வழக்கமாக ஏற்படும் பருவமாறுதல் என்றாலும் உணவு கட்டுப்பாடு, தேகப் பயிற்சி போன்றவைகளை மாற்றுவதன் மூலம் கோடையில் ஏற்படும் நோய்களின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். கோடையை சமாளிக்க 5 எளிய வழிகள் இதோ:

மிதமான உணவு: கோடையில் உங்கள் தேகத்திற்கு தேவை திரவ உணவும். தண்ணீரும்தான். உடல்நிலை மாறுதலை தவிர்க்க இது அவசியமாகும். அதிகமாக சாப்பிடுவதால் அதில் உள்ள கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்துகளால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். இதை தவிர்க்க நீர் சத்துடைய ஆரஞ்சு, தக்காளி, தர்பூசணி போன்ற பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. இது உடல் சூட்டை சமச்சீராக வைக்கவும். நோய் தாக்காமல் இருக்க உதவும். தேவையான ஹைட்ரேட் உற்பத்தியாகி சருமத்தையும் சீராக வைக்கும்.

காற்றோட்டமான துணிகளை அணியுங்கள்: இந்தியாவில் கோடையில் அதிக உஷ்ணமும், ஈரத்தன்மையும் தெரிந்ததுதான். காற்றோட்டமின்மையால் அசௌகரியமாக இருக்கும். ஆகவே உஷ்ணத்தை தணிக்கக் கூடிய பருத்தி, பட்டு, லினன் போன்ற இயற்கையான துணிகளை அணியலாம். சிந்தடிக் துணிகளை தவிர்ப்பது நல்லது.

காலை வெயில் நல்லது: இளம் வெயில் உடம்பின் மீது படுவது நல்லது. சூரிய ஒளியில் வைட்டமின் டி இருப்பதால் விடியற்காலை வெயில் உடல் மீது படும்போது புத்துணர்வுடன் நீங்கள் பணிகளை துவங்க உதவும்.

கோடை நோய்களை எதிர் கொள்ளுங்கள்: கோடைகாலத்தில் பெரும்பாலோருக்கு அதிக உஷ்ணம், சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஜலதோஷம், தொண்டை வறட்சி, குளிர் காய்ச்சல் போன்றவைகளால் பாதிக்கப்படலாம். எதிர் பாராமல் தாக்கும் இந்த நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கற்பூர தைலம், புதினா சாறு, டர்பைன்டன் ஆயில் போன்றவை சாதாரண ஜலதோஷத்தை உடனடியாக நிவர்த்திக்கும் தன்மை உடையவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.