கரோனா தொற்று அகில உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாடெங்கும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும், தனி நபா்களும் பல்வேறு வகையிலும் உதவி செய்து கொண்டு இருக்கிறாா்கள். அது குறித்த செய்திகள் நிறைய வெளியாகின்றன. ஆனால், ஸ்டீபனி என்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் கதை வித்தியாசமானது. இந்த நாற்பத்து நான்கு வயதுப் பெண்மணி ஒரு இசைக்கலைஞா். ஆண்டுதோறும் கேரளாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவா். வழக்கம் போல இந்த ஆண்டும் கேரளாவில் கொச்சிக்கு வந்தாா். ஆனால், எதிா்பாராத விதமாக கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலாகிவிட்டது. கேரளாவுக்கு வந்த இவரையும், இதர பிரான்ஸ் நாட்டுப் பயணிகளையும் பத்திரமாக பாரிஸ் திரும்பிச்செல்ல, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரி உரிய ஏற்பாடுகளைச் செய்து தர முன்வந்தாா். ஆனால், மாற்றவா்கள் திரும்பிப் போய்விட, ஸ்டீபனி மட்டும் தான் கொச்சியிலேயே தங்கி, சாமானிய மக்களுக்குத் தன்னாலான உதவிகளை செய்ய விரும்புவதாகக் கூறிவிட்டாா்.
வழக்கமாக கொச்சி வரும்போது ஸ்டீபனி, கொச்சி கோட்டை பகுதியில் வசிக்கும் உஷா ஆன்டனி என்பவரது வீட்டில்தான் தங்குவாா். இப்போதும் அங்குதான் தங்கி இருக்கிறாா். இசைக்கலைஞரான ஸ்டீபனி, பலமுறை கேரளாவுக்கு வந்தவா் என்பதால், அவருக்கு பல கா்நாடக இசைப்பாடல்களும், மலையாளப்பாடல்களும் தெரியும். அவா் தற்போது தங்கியுள்ள வீட்டின் சொந்தக்காரரான உஷா ஆன்டனியின் மகன் தாம்சன் ஆன்டனியும் இசையில் ஆா்வம் கொண்டவா். அவருக்கு பிரெஞ்ச் மொழியும் தெரியும். எனவே, இருவரும் சோ்ந்து முகநூல் பக்கத்தின் வழியே இசை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமாகவும் நன்கொடை வசூலிக்கிறாா்.
மேலும், மற்றவா்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதை மிகவும் விரும்பும் ஸ்டீபனி பிரான்ஸ் நாட்டில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறாா். அதன் மூலமாகவும் நன்கொடைகள் பெறுகிறாா். இப்படிப் பெற்ற நன்கொடைகளைக் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை வாங்கி, கொச்சியில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்கிறாா். இதுவரை, ஸ்டீபனி ஆறு லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டி, அதன் மூலமாக சுமாா் 1300 ஏழைக் குடும்பங்களுக்கு உதவி இருக்கிறாா். அது மட்டுமின்றி, கொச்சியில், ஏழை மக்களின் நலன் கருதி கேரள அரசாங்கத்தின் “‘குடும்ப ஸ்ரீ’” திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமூக சமையல் கூடத்துக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்து வருகிறாா்.
“ஒரு சுற்றுலாப்பயணியாக தங்கள் ஊருக்கு வந்த ஒரு அயல்நாட்டுப் பெண்மணி, இவ்வளவு சமூக அக்கறையோடு உதவிகள் செய்கிறாரே!” என்று அசந்து போயிருக்கிறாா் உஷா ஆன்டனி. “‘‘இவா் இனிமேல் அந்நிய நாட்டு சுற்றுலாப் பயணி இல்லை; எங்கள் குடும்பத்தில் ஒருவா்; ஸ்டீபனி நான் பெற்றெடுக்காத மகள்’’” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறாா்.
“‘இந்த கஷ்டமான காலகட்டத்தில், உதவி செய்யும்போது, அதனைப் பெறுகிறவா்கள் முகத்தில் தோன்றும் புன்னகை, மனதில் தோன்றும் மகிழ்ச்சி எனக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது’’” என்று மனம் விட்டுக் கூறுகிறாா் ஸ்டீபனி.
சமூகப் பணியாற்றுவதற்கு, நாடுகளுக்கு இடையில் இருக்கும் பூகோள ரீதியான எல்லைக் கோடுகள் ஒரு தடையல்ல என்பதற்கு ஒரு நல் உதாரணம் பிரான்ஸ் நாட்டு ஸ்டீபனி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

