47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விசாவுக்காக திருமணம்!

நடிகை ராதிகா ஆப்தே,  இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி இருக்கிறார்.

News image
Updated On :4 நவம்பர் 2020, 12:30 am

DIN

நடிகை ராதிகா ஆப்தே, இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது, அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ""எனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. லண்டன் செல்ல விசா பெறுவதில் நிறைய சிரமங்கள் இருந்தன. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் விசா எளிதாகப் பெற்று விடலாம் என்று அறிந்தேன். அதனாலேயே லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தேன். இது நியாயமற்ற செயல்தான்'' என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.