

மாடல் < நடிகை!
சன் தொலைக்காட்சியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் தொடர் "அன்பே வா'. இத் தொடரின் நாயகி பூமிகாவாக அறிமுகமாகியிருப்பவர், டெல்னா டேவிஸ். கேரளாவைப் பூர்விகமாக கொண்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருச்சூரில்தான். பி.ஏ. ஆங்கிலம் படித்திருக்கிறார். இவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸரும் கூட.
திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பு மாடலாக இருந்தவர். அதன் மூலம்தான் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
"விடியும் வரை பேசு' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்தப் படங்கள் இவருக்கு சரியான வரவேற்பைப் பெற்றுத் தராததால், சின்னத்திரை பக்கம் வந்திருக்கிறார்.
"அன்பே வா' தொடர்தான் இவருக்கு முதல் சின்னத்திரை தொடர். இவர், எதிர்பார்க்கும் வரவேற்பை சின்னத்திரையாவது வழங்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் இணையும் மீனா !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் "பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அண்ணன் தம்பிகளுக்கு இடையான பாசம்தான் தொடரின் கதைக்களம். இதில் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பதுபோல், ஜீவா - மீனா ஜோடிக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.
இந்நிலையில் தொடரின் கதைப்படி மீனா கர்ப்பமாக இருந்தார். ஆனால், அதே சமயத்தில் நிஜத்திலும் மீனாவாக நடித்து வந்த ஹேமா கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து வீட்டில் எளிமையாகவும், தொடரில் தடபுடலாகவும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஹேமாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால், மீனா தொடரில் இருந்து சிலமாதமாக ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் வேறு ஒருவரை மீனா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தயாரிப்புக் குழு ஏற்பாடு செய்தனர். ஆனால் மீனா கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நடிக்க வைக்கக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், ஹேமா தற்போது மீண்டும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால், விரைவில் ஹேமாவை பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்

சாலை தடுப்பில் டிரக் மோதி விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

பேரவைத் தோ்தல் : பாதுகாப்புப் பணியில் 700 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள்: தோ்தல் அதிகாரி

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

