கரோனாவும் தீபாவளியும்...
தீபாவளி பர்சேஸ் செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித இடைவெளியைக் கடைப் பிடியுங்கள்.


தீபாவளி பர்சேஸ் செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.
மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
வயதானவர்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்லாமல் அவர்களுக்கு தேவையானவற்றையும் நீங்களே வாங்குங்கள்.
இது கரோனா காலம். ஆதலால் தீபாவளி நேரத்தில் பட்சணங்களை வெளியே ஆர்டர் செய்யாமல் முடிந்த அளவு நீங்களே வீட்டில் தயார் செய்யுங்கள். கரோனா எங்கே யாருக்கு இருக்குமோ என்பதால் வீட்டிலேயே செய்வது நல்லது. குறைவான செலவில் நிறைய பட்சணமும் கிடைக்கும்.
தீபாவளியை கரோனாவோடு கொண்டாட வேண்டி இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கைகள் மிகமிக அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...