பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சோளம் உண்பதால் கிடைக்கும்  நன்மைகள் 

சோளத்தைப் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கிறது.

News image
Updated On :14 அக்டோபர் 2020, 12:30 am

ஷோபனா தாசன்


சோளத்தைப் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கிறது.  சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.   

சோளத்தில் வைட்டமின் பி சத்துகள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துகள்  சோளத்தில்  இருக்கின்றன. 

கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. 

சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடகாத்திரமான எடையைப்  பெற முடியும். 

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு ரத்த  அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கும்.

சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, சுருக்கங்கள்  ஏற்படுவதை தாமதிக்கிறது.  

சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பாலில் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் சரியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.