கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா? அதனுடன் 2 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரை உபயோகப்படுத்தினால் புளிப்பு இன்றி அருமையாக இருக்கும்.
இலையுடன் கூடிய காய்கறிகள் அதே பசுமையுடன் இருக்க அதை சேகரித்து வைக்கும் போது செய்திதாள்களில் சுற்றி வைக்கவும்.
பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
பருப்பு வகைகளைச் சமைக்கும் போது சிறிதளவு பூண்டை சேர்த்தால் வாயு தொந்தரவை குறைக்கும்.
ஊறுகாயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
வேக வைத்த முட்டையின் ஓட்டை அகற்றாமல் குளிர்ந்த நீரில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் சிறிது காலம் கெடாமல் இருக்கும்.
பார்லி பவுடரை காய்கறிகள் சமைக்கும் போது சிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
மில்க் கிரீமிலிருந்து வெண்ணெய்யைப் பிரித்து எடுத்து பிறகு எஞ்சி இருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு பாலைச் சேர்த்து கொதிக்க வைத்தால் மென்மையான பன்னீர் கிடைக்கும்.

சமையல் செய்ய குக்கருக்குள் வைக்கப்படும் பொருள்கள் குக்கரின் முக்கால் பகுதிக்கு மேல் இருக்கக் கூடாது. அதுபோன்று பிரஷர் குக்கர் சூடு ஆறும் முன்பே "வெயிட்டை" உருவி எடுத்தால், ஆவி முகத்தில் அடிக்கக் கூடும். அதனால் பாதுகாப்பாக அதனை உருவி எடுங்கள்.
பூரி மென்மையாக, ருசியாக இருக்க வேண்டுமானால் மாவை பிசையும் போதே அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை (சீனி) சேருங்கள்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேத்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


