புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முருங்கைப்பூ பொரியல் 

வாணலியில் காய்ந்த மிளகாய்,  வேர்க்கடலை  ஆகியவற்றை  வறுத்து மிக்ஸியில்  கொரகொரப்பாக  அரைத்து எடுக்கவும்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 2:28 pm

தினமணி

தேவையானவை:  

முருங்கைப்பூ - 1 கிண்ணம்
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி அளவு
வெங்காயம்  - 1 
பூண்டு - 4 பல்
வேர்க்கடலை  - 50 கிராம்
காய்ந்த மீளகாய்  - 4 
கடுகு, உளுந்தம்பருப்பு  -1 தேக்கரண்டி
மஞ்சள்  தூள்  -  1 சிட்டிகை
எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப

செய்முறை:  

வாணலியில் காய்ந்த மிளகாய்,  வேர்க்கடலை  ஆகியவற்றை  வறுத்து மிக்ஸியில்  கொரகொரப்பாக  அரைத்து எடுக்கவும்.  பின்பு வாணலியில் எண்ணெய்யைவிட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து  அதில் பூண்டு, வெங்காயம், உப்பு,  மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கவும்.  பூண்டு, வெங்காயம்  பாதி வதங்கியவுடன்  முருங்கைப்பூ,  முருங்கைக்கீரை  சேர்த்து  நன்கு புரட்டவும். கலவை  நன்கு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள  வேர்க்கடலைப் பொடியைத் தூவி கிளறி  இறக்கவும். சுவையான  முருங்கைப் பூ  பொரியல்  தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.