தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சின்னத்திரை மின்னல்கள்!: புதிய தொடரில் பூர்ணிமா பாக்யராஜ்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் "எங்க வீட்டு மீனாட்சி" என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வள்ளியம்மை என்ற குடும்பத் தலைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் பூர்ணிமா பாக்யராஜ் .

News image
Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:30 am

ஸ்ரீ

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் "எங்க வீட்டு மீனாட்சி" என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வள்ளியம்மை என்ற குடும்பத் தலைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் பூர்ணிமா பாக்யராஜ் .

செட்டிநாட்டின் பாரம்பர்யம் கொண்ட கதைகளமாக இந்தத் தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூர்ணிமா:

அதில், "முதல் முறையாக கலர்ஸ் தமிழ் சேனலுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எனக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

சின்னத்திரை ரசிகர்களை இந்த தொடரில் நடிப்பதன் மூலம் மகிழ்விக்க முடியும், அவர்கள் எனது நடிப்பை ரசித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார். வரும் செப்டம்பர் முதல் இந்தத் தொடரின் ஒளிபரப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, ஏற்கெனவே, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "கண்மணி' என்ற தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த பூர்ணிமா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சூர்யவம்சம்' என்ற தொடரில் அன்னபூரணியாகவும் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.