தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது மாவின் அளவிற்குத் தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு அரைத்து தயிர் வடை செய்தால் தயிர்வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
உளுந்தம் பருப்பு வடை செய்யும்போது சிறிது ஐஸ்கட்டியைச் சேர்த்து அரைத்து தேங்காய்த் துருவல் கலந்து வடை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
மாங்காய்த் தொக்கு செய்யும்போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற, மாங்காய்த் தொக்கு சுவையாக இருக்கும்.
பூரி பொரிக்கும்போது எண்ணெய்யில் இரண்டு தேக்கரண்டி நெய்யைக் கலந்து பூரி செய்ய, அதன் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
கொஞ்சம் புளி கரைத்த நீரில் ஒரு தக்காளிப் பழத்தைப் பிசைந்து விட்டு சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து, சிறிது சீரகத்தை கசக்கிப்போட்டு அடுப்பில் வைத்து எடுத்தால் ஐந்தே நிமிடத்தில் திடீர் ரசம் தயார்.
சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதுடன் சீக்கிரமாக ஊசியும் போகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









